அமெரிக்காவின் இந்த ஆண்டின் இறுதியில் ஜனாபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை அறிவித்துள்ளார். கமலா ஹாரிஸ் இந்திய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் ஆவர். அவருடைய அப்பா ஆப்பிரிக்க நாடான ஜமைக்காவைச் சேர்ந்தவர். அவருடைய அம்மா இந்தியாவைச் சேர்ந்தவர். கமலா, தற்போது அமெரிக்கா செனட் உறுப்பினராக இருந்துவருகிறார். கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழ்நாட்டு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர்.
இதுதொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ட்விட்டர் பதிவில், ‘அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட பெண்ணின் மகளான கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பது இந்தியர்களுக்கும் குறிப்பாக தமிழர்களுக்கும் பெருமை தரக் கூடிய நிகழ்வு’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான தி.மு.க எம்.பி கனிமொழி ட்விட்டர் பதிவில், ‘அமெரிக்காவில் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் இந்திய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளது உண்மையில் பெருமைக்குரிய விஷயம். அதிபர் தேர்தலுக்கு அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop