Breaking News
Home / சினிமா / சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்யா?

சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்யா?

‘அருவா’ படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை படக்குழு மறுத்துள்ளது.

சூரரைப்போற்று படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’, ஹரி இயக்கத்தில் ‘அருவா’ ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இந்நிலையில் ‘அருவா’ படத்திலிருந்து சூர்யா விலகியிருப்பதாகவும், அவருக்கு பதிலாக அருண் விஜய் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இத்தகவலை படக்குழுவினர் முழுவதுமாக மறுத்துள்ளனர்.

திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட உடன் ‘அருவா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கி குறுகிய காலத்தில் நிறைவடையும் என படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ராஷிகண்ணா சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

சூர்யா – ஹரி கூட்டணியில் உருவாகும் 6-வது படம் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான சில மாதங்களில் கொரோனா அச்சுறுத்தல் ஆரம்பித்தது.

 

இதையடுத்து திரையரங்குகள் மூடப்பட்டு, படப்பிடிப்பு தடை செய்யப்பட்டதால் தயாரிப்பாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர். இதைக் கருத்தில் கொண்டு இயக்குநர் ஹரி ‘அருவா’ படத்தின் தனது சம்பளத்தில் 25% குறைத்துக் கொண்டதாக அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

Thanks to : news 18

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster