Breaking News
Home / உலக செய்திகள் / சாம்பலை வெளியேற்றும் எரிமலை: அச்சத்தில் மக்கள் !!

சாம்பலை வெளியேற்றும் எரிமலை: அச்சத்தில் மக்கள் !!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள சினபங்க் எரிமலை 16,400 அடி உயரத்தில் சாம்பலை வெளியேற்றி வருகிறது.

இந்தோனேசியாவில் சினபங்க் எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எரிமலையின் சீற்றத்தை தொடர்ந்து 30 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சில கிராமங்களில் 20 கிலோமீட்டர் தூரம் வரை சாம்பல் படர்ந்துள்ளது. 400 ஆண்டுகளாக குமுறி வரும் இந்த எரிமலை 2010-ம் ஆண்டில் குழம்பை வெளியேற்றிதில் 2 பேர் உயிரிழந்தனர்.

2014-ம் ஆண்டில் 16 பேரும், 2016ம் ஆண்டில் 7 பேரும் எரிமலை சீற்றத்தால் உயிரிழந்தனர். இந்தோனேசியாவில் உள்ள முக்கியமான 120 எரிமலைகளில் சின்னபங் மிகமுக்கியமானதாகும்.

 

Thanks to : news 18

About Admin

Check Also

பெகாசஸ் ஸ்பைவேர்; இஸ்ரேல் நிறுவனம் மீது ஆப்பிள் நிறுவனம் வழக்கு

வாஷிங்டன்: பெகாசஸ் ஸ்பைவேர் என்னும் உளவு மென்பொருளை ஐபோன்களில் நிறுவுவதற்கு எதிராக அதனை உருவாக்கிய இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் மீது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster