Breaking News
Home / செய்திகள் / “150 ஆம்புலன்ஸ் வாங்கப்படும்’ -வேலூர் மாவட்டம் ..

“150 ஆம்புலன்ஸ் வாங்கப்படும்’ -வேலூர் மாவட்டம் ..

வேலூர்: ”நோயாளிகளை அழைத்துச் செல்ல புதிதாக, 150 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும்,” என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற ராதா கிருஷ்ணன், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில், தமிழகத்தில்தான் அதிகளவில், 30.88 லட்சம் பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது, இறப்பு சதவீதம், 1:4 ஆக உள்ளது. 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அதிகம் இறக்கின்றனர். ரத்த கொதிப்பு, நீர?ழிவு, உடல் பருமன் உள்ளவர்களுக்கு, கொரோனா தாக்கம் அதிகமுள்ளது. இதை எப்படி கட்டுப்படுத்துவது என ஆலோசித்து வருகிறோம். இறப்பு சதவீதத்தை குறைக்க புதிய திட்டம் உருவாக்கப்படும். வேலூரில் விரைவில், ‘பிளாஸ்மா’ மையம் துவக்கப்படும். தமிழகத்தில், 129 மையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சித்தா, ஆயுர்வேதம் மூலம் குணப்படுத்த, 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், நோயாளிகளை அழைத்துச் செல்ல புதியதாக, 150 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும். போலி மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, சட்ட திருத்தம் செய்ய, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Thanks to :  dianamalar

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster