நெல்லை மாவட்டத்தில் தங்கப்புதையலை எடுக்க வேண்டி, குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற பாட்டி மற்றும் தந்தையை போலீசார் கைது செய்தனர்
நெல்லை களக்காடு அருகே உள்ள சடையமான்குளத்தைச் சேர்ந்த பார்வதி என்பவரது வீட்டில், தங்கப்புதையல் இருப்பதாகவும், அதனை எடுக்க பூனையை நரபலி கொடுக்க வேண்டும் எனவும் சாமியார் கிரான ராஜன் என்பவர் தெரிவித்துள்ளார்.
புதையலுக்கு ஆசைப்பட்ட பார்வதியும், அவரது மகன் குமரேசனும் நரபலிக்கு சம்மதம் தெரிவித்த நிலையில், பூஜை நேரத்தின் போது பூனை தப்பித்து ஓடியது. இதனால் குமரேசனின் மூத்த மகன் அல்லது இளைய மகனை நரபலி கொடுக்க வேண்டும் என சாமியார் கிரான ராஜன் கூறியுள்ளார். அப்போது குடி போதையில் இருந்த குமரேசன் இதற்கு சம்மதித்துள்ளார்.
பாட்டி பார்வதியும் குழந்தையை நரபலி கொடுக்கலாம் என ஈவு இரக்கமற்ற முடிவை எடுத்துள்ளார். இதனை அறிந்த குமரேசனின் மனைவி, இருவருடனும் சண்டைப் போட்டுவிட்டு, வீட்டை விட்டு குழந்தையுடன் ஓடிவந்து, அக்கம்பக்கத்தினரிடம் நடந்ததை கூறி கதறியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சாமியார் கிரான ராஜன், மூதாட்டி பார்வதி மற்றும் முருகேசன் ஆகிய மூன்று பேரையும் உடனடியாக கைது செய்தனர்.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop