Breaking News
Home / செய்திகள் / காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு !!

காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு !!

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நிரப்பப்படாமல் உள்ள நீதித்துறை உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப மத்திய சுற்றுச்சூழல் துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய அரசு 2010-ம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்டத்தை உருவாக்கியது. இந்த சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட தீர்ப்பாயங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு போபால், சென்னை, கொல்கத்தா, புனே ஆகிய இடங்களில் மண்டல அமர்வுகள் உருவாக்கப்பட்டன.

எனினும் தற்போது டெல்லியில் உள்ள முதன்மை அமர்வு மற்றும் சென்னையில் உள்ள தென்மண்டல அமர்வில் மட்டுமே நீதித்துறை மற்றும் நிபுணத்துவ உறுப்பினர்கள் இருப்பதால் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. பிற மண்டல தீர்ப்பாயங்கள் செயல்படாமல் உள்ளன. இந்த நிலையில் 9 நீதித்துறை உறுப்பினர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதில் காலி பணியிடங்கள் நிரப்பப்படுவதால் சென்னையில் உள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் இரண்டாவது அமர்வு விரைவில் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டிலேயே டெல்லியில் உள்ள முதன்மை அமர்விற்கு அடுத்தபடியாக அதிக வழக்குகள் தென்மண்டல அமர்வில்தான் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

 

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆக்ஸ்ட் 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Thanks to : news 18

 

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster