Breaking News
Home / செய்திகள் / தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.- வானிலை ஆய்வு மையம்..

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.- வானிலை ஆய்வு மையம்..

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் தஞ்சாவூர், சேலம், தர்மபுரி மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் தஞ்சாவூர் திருவாரூர் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.

 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குடியாத்தத்தில் 5 சென்டி மீட்டர் மழையும் பந்தலூரில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.மீனவர்களுக்கான எச்சரிக்கை:

சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கும். சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் கர்நாடகா முதல் தெற்கு குஜராத் கடற்பகுதி வரையிலும், தென்மேற்கு மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபு கடல் பகுதிகளுக்கு வரும் 18ஆம் தேதி வரையும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

 

Thanks to : news 18

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster