Breaking News
Home / செய்திகள் / கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு யோகா பயிற்சி மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை!!

கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு யோகா பயிற்சி மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 61000-க்கும் மேற்பட்டோருக்கு யோகா பயிற்சிகள் மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 61000-க்கும் மேற்பட்டோருக்கு யோகா பயிற்சிகள் மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுக்கு பெரும்பாலும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அவர்கள் தொடர்ந்து சுவாசப் பயிற்சியில் ஈடுபட்டால் சுவாசப் பாதைகள் சீராகும்.

 

இதனைக் கருத்தில்கொண்டு தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெரும் இடங்களுக்கே சென்று இப்பயிற்சிகள்  அளிக்கப்படுகிறது. இது தவிர நீராவி பிடித்தல், சுவாசத்திற்கான நறுமண சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. இப்பணிகளில் 200-க்கும் மேற்பட்ட இயற்கை மருத்துவத்துறை மருத்துவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இதன் மூலம் இதுவரை 61,000 கொரோனா நோயாளிகள் பயனடைந்திருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

 

Thanks to : news 18

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster