Corona | வேலூரில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் தலா 100 பேருக்கு மேல் ஒரே நாளில் தொற்று உறுதியாகியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 209 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,131 ஆக அதிகரித்துள்ளது. கன்னியாகுமரியில் 15 சிறுவர்கள், 58 பெண்கள் உட்பட 161 பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 500 ஐ கடந்துள்ளது.
தேனியில் புதிதாக 126 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு 1855 ஆக அதிகரித்துள்ளது.
நெல்லையில் ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1811-ஆக உயர்ந்துள்ளது. சிவகங்கையில் புதிதாக பாதிக்கப்பட்ட 44 பேர் உட்பட 1098 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் 18-ம் தேதி வரை கடைகள் அடைக்கப்படுகின்றன
திருச்சி கே.கே. நகர் ஆயுதப்படை உதவி ஆணையருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதால் உதவி ஆணையர் அலுவலகம் மூடப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் தொற்று உறுதியானவர்கள் விருப்பத்தின் பேரில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது .
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop