கொரோனாவால் உயிரிழந்த வேல்முருகனின் குடும்பத்தினருக்கு பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தவர் வேல்முருகன்( 43). சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு நாட்காளகவே அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்து தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில், இன்று அதிகாலையில் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவருடைய மறைவுக்கு பத்திரிக்கையாளர் சங்கங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து உள்ளனர்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், திரு.வேல்முருகன் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அளிக்கிறது. வேல்முருகன் அவர்களது பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் என ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுப் பணியில் ஈடுபடும் ஊடகத்துறை துறை நண்பர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டரில், மக்கள்தொலைக்காட்சி, “வேல்முருகன் கொரோனா வைரஸ் தாக்குதலால் இன்று காலை உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களும்“ என்றுள்ளார்.

கனிமொழி எம்.பி தனது ட்விட்டரில், “ஊடகத்துறையில் கடந்த 20 ஆண்டுகளாக ஒளிப்பதிவாளராக பணியாற்றிவந்த திரு.வேல்முருகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்“ என்றுள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனாவால் உயிரிழந்த வேல்முருகனுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.
Thanks To: News 18
Rathiri Rounds Never Stop