Breaking News
Home / செய்திகள் / பால் விநியோகம் செய்யமறுக்கும் முடிவு கைவிடப்படுகிறது -பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு….

பால் விநியோகம் செய்யமறுக்கும் முடிவு கைவிடப்படுகிறது -பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு….

சுமூக தீர்வு எட்டப்பட்டதால் காவல்துறையினருக்கு பால் விநியோகம் செய்ய மறுக்கும் முடிவு கைவிடப்படுவதாக பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பால் முகவர் சங்க தலைவர் பொன்னுசாமி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை விவரம்:

”கொரோனா பேரிடர் காலமான தற்போது தமிழகம் முழுவதும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை விநியோகம் செய்யும் பால் முகவர்களுக்கு காவல்துறையினர் தரப்பில் இருந்து பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருவதால் அது குறித்து தமிழக அரசின் கவனத்திற்கும், காவல்துறை தலைவர் கவனத்திற்கும் கொண்டு சென்றும் உரிய நடவடிக்கைகள் இல்லாத காரணத்தால் காவல்துறையினருக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்கிற முடிவை கனத்த இதயத்துடன் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு அதற்கான அறிவிப்பை நேற்று காலை வெளியிட்டிருந்தோம்.
அந்த அறிவிப்பை பார்த்து ஒருபுறம் ஆதரவும் சில இந்து அமைப்புகள் என்கிற பெயரில் மறுபுறம் மிரட்டலும் என எண்ணற்ற தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன.
காவல்துறையினர் ஒரு சிலர் செய்கின்ற தவறுக்கு ஒட்டுமொத்த காவல்துறையினருக்கு பால் விநியோகம் செய்ய மறுப்பதை மறுபரிசீலனை செய்யுங்கள், உங்களது நியாயமான கோரிக்கைகளை தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என மூத்த பத்திரிகையாளர் திரு. ஏழுமலை வெங்கடேசன் ஆகியோர் கோரிக்கை முன் வைத்தனர். நானும் எங்களது சங்கத்தின் நிர்வாகிகளோடு கலந்து பேசி நல்லதொரு முடிவை அறிவிப்பதாக தெரிவித்தேன். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பால் நிறுத்த அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தினர்.

மேலும் காவல்துறை தரப்பில் இருந்து தொலைபேசி வாயிலாகவும், நேரடியாகவும் பேசிய நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு தலைவர் மரியாதைக்குரிய திரு. விக்கிரமராஜா அவர்கள் இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்களது நூதன போராட்டம் குறித்தும், பால் முகவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்ததோடு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் பேசி பால் முகவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்போம் என்றார்.அதன் பிறகு அவரும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழகம் முழுவதும் பால் முகவர்கள் காவல்துறையினரால் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து பேசியதின் அடிப்படையில் சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளது.

மேலும் காவல்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் பேசியவர்கள் தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடித்து தமிழகம் முழுவதும் பால் விநியோகம் செய்யும் பால் முகவர்களுக்கு காவலர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தப்படும் என்கிற உத்தரவாதத்தையும் அளித்துள்ளனர்.

 

Thanks To: News 18

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster