Breaking News
Home / சினிமா / சூர்யாவுக்கு வில்லன் இந்த நடிகரா? ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்!

சூர்யாவுக்கு வில்லன் இந்த நடிகரா? ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்!

சூரரைப்போற்று படத்திற்கு பிறகு சூர்யா(suriya ) அடுத்ததாக ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்க உள்ளார். டி இமான் இசையமைக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளார்.சூரரைப்போற்று படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. ஆனால் தியேட்டரில் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் இணையதளங்களில் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்கிறது

கோலிவுட் வட்டாரம்.ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அந்த படத்தின் தணிக்கை சான்றிதழை பெற்று விட்டனர். இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படத்திற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டன
சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக ராஷிகண்ணா நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து சூர்யாவுக்கு யார் வில்லனாக நடிக்க போகிறார் என்ற கேள்வி அதிகமாக உள்ளது. ஹரி படத்தில் எப்பவுமே வில்லன்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்.அந்த வகையில் இந்தவாட்டி முதல் முறையாக சூர்யாவுக்கு வில்லனாக

 

அர்ஜுன் தாஸ் நடிக்க இருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளது. ஸ்டைலிஷ் வில்லன் ஆன அர்ஜுன் தாஸ் எப்படி கிராமத்து சப்ஜெக்டில் நடிக்க போகிறார் என்பதை பார்க்கவே ஆவலாக இருக்கிறது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்பு வெளிவரும் என தெரிகிறது. கண்டிப்பாக சூர்யா ரசிகர்கள், சூர்யா அர்ஜுன் தாஸ் காம்போவுக்கு வெறித்தனமாக வெயிட் பண்ணுவார்கள்.

 

Thanks To: DOT Tamil

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster