Breaking News
Home / வட மாவட்டங்கள் / காஞ்சிபுரம் / என்னென்ன இயங்கும்? என்னென்ன இயங்காது?-முழு ஊரடங்கு..

என்னென்ன இயங்கும்? என்னென்ன இயங்காது?-முழு ஊரடங்கு..

சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் 12 நாட்களிலும், மருத்துவமனை, மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகளுக்கு தடையில்லை. வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன இயக்கத்திற்கு அனுமதி இல்லை. அதேசமயம், மருத்துவ தேவைகளுக்கு மட்டும் அவை அனுமதிக்கப்படும்.

தலைமைச் செயலகம், சுகாதாரம், வருவாய் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். மத்திய அரசு அலுவலகங்களும் 33 சதவீத ஊழியர்களோடு செயல்படலாம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அரசு ஊழியர்கள், அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்றுவிட்டு, பணிக்கு வரத்தேவையில்லை.

வரும், 29, 30 ஆகிய 2 நாட்கள் மட்டும் 33 சதவீத பணியாளர்களுடன் வங்கிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொதுவிநியோக கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு, பணியாளர்களே அத்தியாவசிய பொருட்களை நேரடியாக வழங்குவார்கள்.

காய்கறி, மளிகை கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் சமூக இடைவெளியோடு காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். இதேபோல், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 கிலோ மீட்டர் தொலைவுக்குள் உள்ள கடைகளிலேயே அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது

உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேநீர் கடைகளுக்கு அனுமதி கிடையாது. உணவுப்பொருட்களை டோர் டெலிவரி செய்ய அனுமதி உண்டு. ஆனாலும், அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களிடம் இருந்து உரிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.

 

முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள் தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள் மற்றும் ஆதரவற்றோருக்கான சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும்.

அச்சு மற்றும் மின்னணு ஊடங்கள், நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள் இயங்கலாம். பணியிட வளாகத்திலேயே தங்கியிருந்து பணிபுரியும் தொழிலாளர்களை கொண்ட கட்டுமான பணிகளுக்கு அனுமதி உண்டு.

சென்னை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொழிலாளர்களுக்கு ஒருமுறை பிசிஆர் பரிசோதனை செய்து, தொழிற்சாலை வளாகத்திலேயே தங்க வைத்து பணியில் ஈடுபடுத்தலாம். இதேபோல், சென்னை எல்லைக்கு அப்பாற்பட்ட இடங்களுக்குச் சென்று, தொழிற்சாலை வளாகத்திலேயே தங்கி பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் பிசிஆர் சோதனை அவசியம்.
சரக்கு போக்குவரத்திற்கும், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் தடையில்லை.

திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக வெளிமாவட்டத்திற்கு செல்வோர், உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தால் இ-பாஸ் வழங்கப்படும்.

அதேசமயம், இந்த 12 நாட்களில் வரும் இரு ஞாயிற்றுக்கிழமைகளும் எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது அந்த இரு நாட்களிலும் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

இதேபோல், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்காது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

 

 

Thanks To: News 18

 

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster