திருப்பூர்: ‛‛தமிழகத்தில் தி.மு.க.,வில் குடும்ப அரசியல் மற்றும் ஊழல் பல வருடங்களாக உள்ளது தான். நாம் குடும்ப அரசியலுக்கு எதிராக போராடுகிறோம். பா.ஜ., குடும்ப அரசியலுக்கு எதிரானது,” என்று பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார். திருப்பூர் பல்லடம் ரோடு லட்சுமி திருமண மண்டபத்தில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது: சிறந்த கலாச்சாரம் கொண்ட தமிழக செயற்குழுவில் பங்கேற்றதில் பெருமையடைகிறேன். திருப்பூர் …
Read More »Monthly Archives: November 2021
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அ.தி.மு.க அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து …
Read More »நாகை, முகவை மாவட்டங்களில் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுமாம். 10 மாவட்டங்களை பாடாய் படுத்துமாம்
சென்னை: ‛‛ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், மதுரை, புதுக்கோட்டை, தேனி தென்காசி, டெல்டா உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்,” என்று வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட் அறிக்கையில் தெரிவித்ததாவது: தெற்கு வங்க கடற்பகுதியில் (4.5 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த …
Read More »பெகாசஸ் ஸ்பைவேர்; இஸ்ரேல் நிறுவனம் மீது ஆப்பிள் நிறுவனம் வழக்கு
வாஷிங்டன்: பெகாசஸ் ஸ்பைவேர் என்னும் உளவு மென்பொருளை ஐபோன்களில் நிறுவுவதற்கு எதிராக அதனை உருவாக்கிய இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் மீது முன்னணி செல்போன் நிறுவனமான ஆப்பிள் வழக்குத் தொடர்ந்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேர் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த ஸ்பைவேர் மூலமாக அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது. உலகம் முழுவதும் ஆப்பிள் …
Read More »வெள்ள சேதம்; முதல்வர் ஸ்டாலினுடன் மத்திய குழு சந்திப்பு
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்னை வந்த மத்திய குழுவினர், இன்று (நவ.,24) முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது; பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின. மேலும், பல இடங்களில் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன. சேதங்களை பார்வையிட, தமிழக அரசின் …
Read More »இந்தியாவில் கோவிட் சிகிச்சையில் 1.11 லட்சம் பேர்
புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 1.11 லட்சமாக குறைந்தத. கடந்த 537 நாளில் இதுவே மிகக்குறைவாகும். இந்தியாவில் நேற்றைய (நவ.,23) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.33 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.35 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.32 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். …
Read More »பட்டப்படிப்பு சான்றிதழ் தாமதம்; மாணவர்கள் தவிப்பு
சென்னை : தமிழக திறந்தநிலை பல்கலையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, சான்றிதழ் வழங்க தாமதமாகி உள்ளதால், பட்டதாரிகள் பதவி உயர்வு மற்றும் புதிய பணிகளுக்கு செல்ல முடியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள், தங்களுக்கான பதவி உயர்வு மற்றும் உயர்கல்வி ஊக்க ஊதியம் பெறும் வகையில், தொலைநிலையில் முதுநிலை படிப்புகள் படிக்கின்றனர். அதேபோல், தனியார் துறையில் பணியாற்றுவோரும், தங்களின் கல்வி தகுதியை உயர்த்தி …
Read More »அரசியல் பேசாமல் ‘அரசியல்’ பேச வைத்த முதல்வர் ஸ்டாலின்!
கோவை : கோவை வந்திருந்த, தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், அரசு விழா என்பதால், அரசியல் பேசாமல், மற்றவர்களை ‘அரசியல்’ பேச வைத்து, சென்னை திரும்பிச் சென்றிருக்கிறார். கோவையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசும்போது,”கடந்த சட்டசபை தேர்தலில் நாம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை. இதைப்பற்றி விரிவாக பேசி, அரசியலாக்க தயாராக இல்லை. இது, அரசு விழா,” என, பேச்சைத் …
Read More »இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்கப்பட்டது ‘போயிங் மேக்ஸ்’ விமானம்
புதுடில்லி: சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ‘போயிங் 737 மேக்ஸ்’ விமானம், இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்கப்பட்டது. முதல் விமானத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சிந்தியா பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவைச் சேர்ந்த ‘போயிங்’ நிறுவனம் தயாரிக்கும் 737 மேக்ஸ் ரக விமானம், 2019ல் எத்தியோப்பியாவில் விபத்தில் சிக்கியது. அதில், நான்கு இந்தியர் உட்பட, 157 பேர் உயிரிழந்தனர். தொழில்நுட்பக் கோளாறு …
Read More »இலவச யாத்திரை திட்ட பட்டியலில் வேளாங்கண்ணி: கெஜ்ரிவால் அறிவிப்பு
புதுடில்லி: ‘முக்யமந்திரி தீர்த்த யாத்ரா யோஜனா’ என்கிற இலவச யாத்திரை திட்டத்தில் வேளாங்கண்ணி தேவாலயத்தையும் சேர்க்கப்பட்டுள்ளது என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ‘முக்யமந்திரி தீர்த்த யாத்ரா யோஜனா’ என்கிற இலவச யாத்திரை திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி அன்று டில்லி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. மூத்த குடிமக்களுக்கான இந்த இலவச யாத்திரை திட்டத்தின் மூலம் 35 …
Read More »
Rathiri Rounds Never Stop