Breaking News
Home / வட மாவட்டங்கள் / திருவள்ளூர் (page 6)

திருவள்ளூர்

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், பண்டிகாவனூர் ஆதரவற்றோர் இல்லம்,அனுப்பம்பட்டு மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஏழை எளியவர்க்கு அரிசி காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட தொகுப்புகளை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்.ராஜா வழங்கினார்…

திருவள்ளூர் மாவட்டம், பண்டிகாவனூர் ஆதரவற்றோர் இல்லம்,அனுப்பம்பட்டு மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஏழை எளியவர்க்கு அரிசி காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட தொகுப்புகளை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்.ராஜா வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பண்டிகாவனூர் ஆதரவற்றோர் இல்லத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் அனுப்பம்பட்டு மேட்டுப்பாளையம் கிராமத்தில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பண்டிகாவனூர் ஆதரவற்றோர் இல்லத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக …

Read More »

வாக்காளர் பட்டியலுக்கான ஆய்வு ; திருவள்ளூர் மாவட்டம்..

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வானகரம் அரசினர் ‌உயர்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியலுக்கான தேர்தல் பார்வையாளர் / பொருளாதாரம் (ம) புள்ளியியல் துறை ஆணையர் முனைவர்.அதுல் ஆனந்த்,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா.பொன்னையா,இ.ஆ.ப., ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.‌ உடன் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ப்ரீத்தி பார்கவி, பூவிருந்தவல்லி வட்டாட்சியர் திரு.குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Read More »

திருவள்ளூர் மாவட்டத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்-பெண் இரண்டாம் நிலை காவலர் தேர்வை எழுதினர்…

திருவள்ளூர் மாவட்டத்தில் 8 மையங்களில் இன்று இரண்டாம் நிலை காவலர் தேர்வை 12 ஆயிரத்து 400 பேர் எழுதினார்.   மாவட்டத்தில் பெண்களுக்கு என தனி கல்லூரி ஒதுக்கப்பட்டு டிஎஸ்பிக்கள் தலைமையில் கண்காணிக்கப்பட்டது. கொரோனா காலத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு தேர்வு எழுத வரும் நபர்களுக்கு சனிடைசர் கொடுக்கப்பட்டு மாஸ்க் இல்லாமல் வருவோருக்கு மாஸ்க் கொடுக்கப்பட்டு சமூக இடைவெளியியுடன் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு மையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் …

Read More »

தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,979 வழக்குகளுக்கு சமரச தீர்வு..

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,979 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. திருவள்ளூர், திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான செல்வநாதன் தலைமை தாங்கினார். மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி பரணிதரன், குடும்ப நல …

Read More »

கொசஸ்தலை ஆற்றில் குளித்த தொழிலாளி சாவு; திருவள்ளூர் மாவட்டம்..

பள்ளிப்பட்டு அருகே ஆற்றில் குளிக்கச்சென்ற கூலித்தொழிலாளி ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பரிதாபமாக செத்தார். பள்ளிப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெங்கட்ராஜ் குப்பம் காலனியை சேர்ந்தவர் வெங்கடமுனி (வயது 33). செங்கல் அறுக்கும் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இரு தினங்களுக்கு முன்பு உறவினர் ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார். அப்போது அங்குள்ள கொசஸ்தலை ஆற்றில் வெங்கடமுனி குளித்தபோது நீரில் மூழ்கி மாயமானார். பள்ளிப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து …

Read More »

ரேஷன் அரிசி ரூபாய் 30 கொடுத்து வாங்கி சாப்பிட்டு வரும் பழங்குடியின மக்கள் குடும்ப அட்டை இல்ல அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை என புகார்..

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட புதுவள்ளூர் கிராமத்து ஆலமரத்தடி இருளர் குடியிருப்பு பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை கட்டி 15 குடும்பத்தில் 48 நபர்களுக்கு மேல் வாழ்ந்துவரும் இவர்கள் நாட்டின் குடிமகனாக கருதப்படும் ஆதார் அட்டை,வாக்காளர் அடையாள அட்டை,மற்றும் அரசு மூலம் வழங்கப்படும்.   குடும்ப அட்டை கூட இல்லாமல் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வசித்து வருவதாகவும் தங்களது பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றால் குடும்ப …

Read More »

தமிழக எல்லையோர போக்குவரத்து சோதனைச் சாவடியில் சென்னை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பாஸ்கர் தலைமையில் அதிகாலை முதல் தீவிர சோதனை !!

ஊத்துக்கோட்டை ஆந்திர-தமிழக எல்லையோர போக்குவரத்து சோதனைச் சாவடியில் சென்னை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பாஸ்கர் தலைமையில் அதிகாலை முதல் தீவிர சோதனை செய்ததில் கணக்கில் வராத 72 ஆயிரத்து 800 ரூபாய் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஆந்திர -தமிழக பகுதியை இணைக்கும் முக்கிய பிரதான சாலையாக இருக்கும் திருப்பதி -சென்னை சாலையில் இயங்கிவரும் வாகன சோதனை சாவடியில் லஞ்சம் பெறுவதாக வந்த குற்றச்சாட்டினை அடுத்து சென்னை ஆலந்துறை தலைமையிடமாகக் …

Read More »

பேரம்பாக்கம் பகுதியில் உள்ள தரைப்பாலம் உடைந்த நிலையில் பெண் மற்றும் பசுமாடு தவறிவிழுந்தது !!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம் பகுதியில் உள்ள தரைப்பாலம் உடைந்தது அப்பகுதியில் சென்ற பெண் ஒருவர் தவறி விழுந்து காயமடைந்த நிலையில் அதே பகுதியில் மீண்டும் பசு மாடு ஒன்று தவறி விழுந்து போராடியதை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர் உடைந்த தரைபாலத்தை முன்னாள் அமைச்சர் ரமணா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்..  

Read More »

கண்டெடுக்கப்பட்ட ஆளில்லா குட்டி விமானம் ; திருவள்ளூர் மாவட்டம்..

பழவேற்காடு அருகே மீனவ கிராமத்தில் மீண்டும் ஒரு ஆளில்லா குட்டி விமானம் கரை ஒதுங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். திருப்பாலைவனம் காவல்துறையினர் அந்தக் குட்டி விமானத்தை கைப்பற்றி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழவேற்காட்டை அடுத்த சாட்டாங்குப்பம் என்ற பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அந்த பகுதி மீனவர்கள் திருப்பாலைவனம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதின்பேரில், காவல் துறையினர் ஆளில்லா குட்டி விமானத்தைக் கைப்பற்றி விசாரணை …

Read More »

பாலாற்றில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் வழியாக கூவம் ஆற்றில் செல்லும் ஆற்று நீரை மலர் தூவி வரவேற்றனர்..

திருவள்ளூர் :. பாலாற்றில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் வழியாக கூவம் ஆற்றில் செல்லும் ஆற்று நீரை பேரம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி சுயம்பிரகாஷ் மற்றும் தேமுதிக கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் மலர் தூவி வரவேற்றனர்…… திருவள்ளூர் அடுத்த கேசாவரம் அணைக்கட்டில் பாலாற்றில் கூடுதலாக நீர்வரத்து வர பெற்றதை அடுத்து தடுப்பணையில் 300 கன அடியிலிருந்து 600 கன அடி உபரி …

Read More »
MyHoster