புதுடில்லி: ‘முக்யமந்திரி தீர்த்த யாத்ரா யோஜனா’ என்கிற இலவச யாத்திரை திட்டத்தில் வேளாங்கண்ணி தேவாலயத்தையும் சேர்க்கப்பட்டுள்ளது என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ‘முக்யமந்திரி தீர்த்த யாத்ரா யோஜனா’ என்கிற இலவச யாத்திரை திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி அன்று டில்லி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. மூத்த குடிமக்களுக்கான இந்த இலவச யாத்திரை திட்டத்தின் மூலம் 35 …
Read More »118.34 கோடி ‘டோஸ்’ :கொரோனா தடுப்பூசி
புதுடில்லி : நாட்டில் இதுவரை 118.34 கோடிக்கும் அதிகமான ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.கொரோனா தடுப்பூசி பணிகள் தீவிரமாக தொடர்கிறது. நேற்று ஒரே நாளில் இரவு 7:00 மணி வரை 71 லட்சத்திற்கும் அதிகமான ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தப்பட்டன. இதையடுத்து, இதுவரை செலுத்தப்பட்ட ‘டோஸ்’களின் எண்ணிக்கை 118.34 கோடியை கடந்துள்ளது என மத்தியசுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
Read More »‘சென்ட்ரல் விஸ்டா’ கட்டுமானம் எச்சரிக்கையுடன் புது மனு தள்ளுபடி
புதுடில்லி :’சென்ட்ரல் விஸ்டா’ எனப்படும் டில்லியில் அமைந்து வரும் புதிய பார்லிமென்ட் வளாகம் தொடர்பான புதிய வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மனுதாரர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. டில்லியில் ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான ராஜபாதையில், புதிய பார்லிமென்ட் வளாகம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது. இந்நிலையில் புதிய வளாகத்தில், …
Read More »நவ., 26 முதல் அலைபேசி கட்டணங்கள் 25% வரை உயர்கிறது!
புது டில்லி: அலைபேசி சேவை வழங்கும் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை 25 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. நவ., 26 முதல் புதிய கட்டணங்கள் அமலுக்கு வரும். இதன் மூலம் ஒரு மாதத்திற்கு ரூ.50 கூடுதலாக செலவழிக்க வேண்டி இருக்கும். தற்போது 28 நாட்களுக்கு தினசரி ஒரு ஜி.பி., டேட்டா மற்றும் வரம்பின்றி அழைப்புகளை மேற்கொள்ள ரூ.219 வசூலிக்கப்படுகிறது. அதுவே தினசரி 1.5 ஜி.பி., என்றால் ரூ.249-ம், …
Read More »இன்று சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் கோலாகலம்
புட்டபர்த்தி: சத்ய சாய்பாபாவின் 96 வது பிறந்த நாள் விழா புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரசாந்தி நிலையத்தின் பஜனை குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் துவங்கியது. தொடர்ந்து ஆண்டறிக்கை வெளியிடப்பட்டது. சத்ய சாய் டிரஸ்ட் மற்றும் அறக்கட்டளையின் மூத்த நிர்வாகிகள் உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள், சத்யசாய்பாபா மீதான அன்பை வெளிப்படுத்தவும், அவரிடம் ஆசி பெறவும் சாய் சன்னதியில் ஒன்று …
Read More »இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ‛ஹலால்’ உணவு கட்டாயமா: பிசிசிஐ விளக்கம்
புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதனால், வீரர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு சுழற்சி முறையில் வீரர்களை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது. இந்நிலையில், வீரர்களின் உணவு விஷயத்திலும் பிசிசிஐ கட்டுப்பாடு விதித்துள்ளதாக செய்தி வெளியானது. …
Read More »ராமாயண் ரயிலில் காவி சீருடை: எதிர்ப்பால் கைவிட்டது இந்திய ரயில்வே
உஜ்ஜைனி : மத்திய பிரதேசத்தில் ராமாயண் விரைவு ரயில் பணியாளர்களின் காவி சீருடைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சீருடை மாற்றப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த 7ம் தேதி டில்லியில் இருந்து புறப்பட்ட ராமாயண் விரைவு ரயிலில் உள்ள பணியாளர்களுக்கு காவி வண்ணத்தில் சீருடை வழங்கப்பட்டது. அயோத்தி, நாசிக், ராமேஸ்வரம் உட்பட ராமாயணத்துடன் தொடர்புள்ள 15 புனித தலங்களுக்கு செல்லும் இந்த ரயிலில் பணியாளர்கள் காவி சீருடை …
Read More »மழையால் பாதிக்கப்பட்ட கர்நாடகாவிற்கு உதவி: பிரதமர் மோடி உறுதி
பெங்களூரு: மழையால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநிலத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என மோடி உறுதி அளித்ததாக பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பை மீறி பெய்துள்ளது. வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழையால், ஏரி, குளம், கட்டை, ஓடைகள் என நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. கனமழை காரணமாக தாழ்வான …
Read More »5 மாநில தேர்தல்: அதிகாரிகள் ஆலோசனை
புதுடில்லி: உ .பி., உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தல் குறித்து தேர்தல் கமிஷன் உயர் அதிகாரிகள் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். உ பி., பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு 2022 மார்ச் மாதத்திற்குள் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கி உள்ளன. மேலும் இம்மாநில தேர்தல் பணிகள், மின்னணு இயந்திரம், மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியன …
Read More »இந்தியாவில் தொடர்ந்து குறையும் தினசரி கோவிட் பாதிப்பு
புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் (நவ.,21) கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,488 ஆக குறைந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 7,579 பேர் மட்டுமே நாடு முழுவதும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த 543 நாளில் பதிவான மிகக்குறைவான பாதிப்பாகும். இந்தியாவில் நேற்றைய (நவ.,22) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: …
Read More »
Rathiri Rounds Never Stop