Breaking News
Home / Tag Archives: #கொரோனா தொற்று

Tag Archives: #கொரோனா தொற்று

இன்றைய கொரோனா பாதிப்பு !!

தமிழகத்தில் இன்று புதிதாக 1,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 11,109 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை …

Read More »

இன்று 5,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 91,191 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 82 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் இன்று மேலும் 5,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,51,370 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 67 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் …

Read More »

கமல்ஹாசன் விளக்கம் ; எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை ?

எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை எஸ்.பி.பி.உடல்நிலை குறித்து விடுத்திருக்கும் அறிக்கையில் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக தெரிவித்துள்ளது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் நலம் விசாரித்தார். கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு …

Read More »

ரகசிய இடத்தில் விநாயகர் சிலைகள் வடிவமைப்பு !!

தென் மாவட்டங்களில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்காக இந்து மக்கள் கட்சி சார்பில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ரகசியமான இடத்தில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 22-ஆம் தேதி வர இருக்கும் நிலையில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்த அண்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்து அமைப்புகள், தடையை மீறி விநாயகர் சிலை …

Read More »

357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- திருவள்ளூர்மாவட்டம் ..

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 357 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,781 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர்: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 357 பேருக்கு கொரோனா உறுதியானதால் …

Read More »

சிகிச்சை முடிந்த முதல் நாளே பொதுநிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர்!!

இந்த ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு குறித்த தேதியை அறிவிப்பதற்காக சென்னை பிர்லா கோளரங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்தார். கொரோனா சிகிச்சை முடிந்த முதல் நாளே ஓய்வெடுக்காமல் பொதுநிகழ்ச்சிக்கு வந்த அமைச்சரால் அதிகாரிகள் கலக்கமடைந்தனர். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோய் குணமானதை அடுத்து அவர் நேற்று காலை வீடு …

Read More »

இன்றும் 4 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு !!

தமிழகத்தில் இன்று 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 66 பேர் உயிரிழக்க, மொத்த உயிரிழப்பு 2,032 ஆக அதிகரித்துள்ளது. இன்று 3,035  பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், இதுவரை மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 92,567 ஆக உயர்ந்துள்ளது.   Thanks to : news 18

Read More »

காற்றின் மூலம் கொரோனா தொற்று!! உலக சுகாதார அமைப்பு விளக்கம்..

சிகிச்சை நடைமுறைகளின்போதும், மருத்துவக் கருவிகள், உபகரணங்கள், அதிகப்படியான கூட்டங்களிலும் கொரோனா வைரஸின் காற்றுப் பரவல் நடக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது சிகிச்சை நடைமுறைகளின்போதும்,  மருத்துவக் கருவிகள், உபகரணங்கள், அதிகப்படியான கூட்டங்களிலும் கொரோனா வைரஸின் காற்றுப் பரவல் நடக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது தொடுதல் மூலமாக மட்டுமே பரவி வந்த கொரோனா வைரஸானது தற்போது காற்றின் மூலமாகவும் பரவும் அபாயம் இருப்பதை 32 நாடுகளைச் சேர்ந்த …

Read More »

மின்சாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி !!

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், 9 சட்டமன்ற உறுப்பினர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். மேலும், அமைச்சர் கே.பி அன்பழகன் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், மின்சார துறை அமைச்சர் தங்கமணிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.     நேற்று முன் தினம் அதிமுக தலைமை …

Read More »

அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்;கொரோனா பாதித்த எம்.எல்.ஏ.க்கள் நலமுடன் உள்ளனர்…

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட திமுக மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவமனையில் நலமுடன் உள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைகள் வழங்க இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து வசதிகளுடன் கூடிய 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை ஓரிரு நாளில் முதலமைச்சர் துவக்கி வைக்கிறார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் இன்று 13.5 கிலோ லிட்டர் …

Read More »
MyHoster