Breaking News
Home / இந்தியா / 6 கட்டங்களாக பள்ளிகளைத் திறக்க முடிவு?

6 கட்டங்களாக பள்ளிகளைத் திறக்க முடிவு?

பள்ளிகளை வாரத்தில் 3 நாட்கள் மட்டும் நடத்த( NCERT) தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மத்திய அரசிடம் சமர்ப்பித்த தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஊரடங்குக்கு பிறகு பள்ளிகளை 6 கட்டங்களாக திறக்கலாம் என தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் மத்திய அரசுக்கு பரிந்துரைத்து இருக்கிறது.

முதலில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கும், ஒரு வாரத்துக்கு பிறகு 9, 10-ம் வகுப்புகளுக்கும், 2 வாரங்களுக்கு பின் 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கும், 3 வாரங்களுக்கு பிறகு 3 முதல் 5-ம் வகுப்புகளுக்கும் திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்துக்கு பின் 1 மற்றும் 2-ம் வகுப்புகளுக்கும் மற்றும் 5 வாரங்களுக்கு பிறகு நர்சரி வகுப்புகளுக்கும் திறக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறந்த பிறகு, ஒவ்வொரு மாணவரின் உடல்வெப்பநிலை பரிசோதிக்க வேண்டும், வகுப்பறையில் 30 முதல் 35 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.

மாணவர்கள், ஆசிரியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம், ஒவ்வொரு மாணவர் அமரும் இருக்கையிலேயே தினமும் அமர வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

 

வகுப்பறையில், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் திறந்து வைக்கப்பட வேண்டும். ஏ.சி போடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று NCERT பரிந்துரைத்துள்ளதாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Thanks To: News 18

About Admin

Check Also

அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் : மோடி

புதுடில்லி:அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் என அரசியல் சாசன நாள் விழாவில் பிரதமர் மோடி கூறினார்.     …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster