Breaking News
Home / சினிமா / KGF இயக்குனரின் அடுத்தபடம் இந்த படம் தான் டாப் ….

KGF இயக்குனரின் அடுத்தபடம் இந்த படம் தான் டாப் ….

கன்னட சினிமா உலகிலேயே பெரிய புரட்சியை ஏற்படுத்திய படம் என்றால் அது கே ஜி எஃப்(KGF:chapter 1) படம் தான். இதுவரை இல்லாத அளவுக்கு கன்னட சினிமாவை உலக அளவுக்கு பெருமைப்படுத்தியது.

அந்த படத்தில் நடித்த நடிகர் யாஷ் உலகப் புகழ் பெற்றார் என்பதும் மறுக்க முடியாத ஒன்று. இந்நிலையில் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் அட்டகாசமாக உருவாகி வருகிறது.

படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அக்டோபர் அல்லது நவம்பரில் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம்பாகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

தற்போதைக்கு கன்னட சினிமாவின் டாப் இயக்குனர் கேஜிஎஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் என்பவர் தான். இந்நிலையில் பிரசாந்த் நில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர்-ஐ வைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.

அந்த படத்தை மைத்திரி மூவிஸ் சார்பில் தயாரிக்க உள்ளனர். இதனை பட நிறுவனமே சமீபத்தில் அறிவிப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் இணையதளங்களில் தலைகால் புரியாமல் ஆடி வருகின்றனர்.

அடுத்ததாக பிரசாந்த் நில் தமிழ் சினிமாவில் சூர்யாவுக்காக ஒரு திரைக்கதையை உருவாக்கி வைத்துள்ளாராம். விரைவில் அந்த கதை படம் பற்றிய அறிவிப்பு வரும் என்கிறது கோலிவுட் வட்டாரம்…

 

 

Thanks To: Cinema Pettai

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster