சென்னை:
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தலைநகர் சென்னையில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை இரண்டு இலக்கங்களை தாண்டியே உள்ளது.
நேற்று மாலை சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, சென்னையில் மட்டும் 768 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் எந்த அறிகுறியும் இல்லாமல் 98 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 98 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. பாதுகாப்பு கருதியே கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Rathiri Rounds Never Stop