பொள்ளாச்சி:
பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குடோன்களில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்படுவதாக தகவல் வந்தது.
இதையடுத்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி தமிழ்ச்செல்வன், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சுப்புராஜ், சிவானந்தம், கிழக்கு போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், அழகேசன் ஆகியோர் பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் உள்ள கடைகள் மற்றும் குடோன்களில் ஆய்வு செய்தனர். அப்போது, கோட்டூர் சாலையில் உள்ள மளிகை ஸ்டோர் நடத்தி வரும் சுப்ரமணி (57) என்பவரின் குடோனில் ஆய்வு நடத்தினர்.
அப்போது குடோனில் தடை செய்யப்பட்ட 70 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இதையடுத்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Rathiri Rounds Never Stop