Breaking News
Home / தென் மாவட்டங்கள் / தேனி / கேரள போலீசார் அனுமதிக்காததால் மலை கிராமங்களுக்கு குதிரைகளில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

கேரள போலீசார் அனுமதிக்காததால் மலை கிராமங்களுக்கு குதிரைகளில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

மேலசொக்கநாதபுரம்:

போடி அருகே கொட்டகுடி கிராம ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் டாப் டே‌ஷன், சென்ட்ரல் மலை கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால் குரங்கணியிலிருந்து 13 கிலோ மீட்டர் தூரம் நடந்து கேரள மலைப்பகுதி வழியாகத் தான் செல்ல வேண்டும்.

தற்போது உள்ள கொரோனா ஊரடங்கால் தமிழக-கேரளா பகுதிகளான எல்லைப்பகுதிகள் மூடப்பட்டுள்ள நிலையில் போடியிலிருந்து கேரளா மாநிலத்திற்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் என அனைத்து அத்தியாவசிய பொருட்கள் தமிழக எல்லைகளில் தாராளமாக தடையின்றி அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசின் கொரோனா நிவாரணப் பொருட்களான அரிசி, பலசரக்கு, காய்கறிகளை டாப்டே‌ஷன், சென்ட்ரல் மலைக்கிராம மக்கள் 250 பேர்களுக்கு வழங்க அதிகாரிகள் 2 டெம்போக்களில் நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு போடியிலிருந்து போடிமெட்டு தமிழக எல்லை அடைந்தனர்.

பின்னர் கேரளா எல்லைக்குள் நுழைய முயன்ற போது கேரளா மாநில போலீசார் அவர்களை அனுமதிக்க மறுத்தனர்.

போடி தாசில்தார் மணிமாறன், வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கேரள போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் தமிழக அரசின் நிவாரண பொருட்களை கொண்டு செல்ல அனுமதி மறுத்து விட்டனர்.

இதனால் தமிழக அதிகாரிகள் நிவாரணப் பொருள்களை திருப்பி கொண்டு வந்து விட்டனர். இதனையடுத்து தமிழக அரசின் நிவாரணப் பொருட்கள் குரங்கணி மலை கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து 10 குதிரைகள் மூலம் மலைப் பாதை வழியாக டாப் ஸ்டேசன், சென்ட்ரல் ஸ்டேசன் மலை கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்து குரங்கணி மலை கிராம மக்கள் கூறுகையில், கேரளத்துக்கு செல்லும் அனைத்து அத்தியாவசியப் பொருள்கட்ன் வாகனங்களை போலீசார் அனுமதித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் நிவாரண பொருட்கள் ஏற்றிச் சென்ற அரசு வாகனங்களையே திருப்பி அனுப்பியது அதிருப்தி அளிப்பதாக உள்ளது என்றனர்.

About Admin

Check Also

அண்ணனா..!!!? தம்பியா..!!!? மோதிக்கொள்ளும் சகோதரர்கள்……!!

அண்ணன் திமுக, தம்பி அதிமுக: ஆண்டிபட்டியில் 2வது முறையாக மோதிக் கொள்ளும் சகோதர வேட்பாளர்கள்..!! தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் திமுக, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster