வேலூர்,
வேலூர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த 45 வயது நபர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். இதையடுத்து அவர் வசித்து வந்த பகுதி, அவர் கடை நடத்தி வந்த பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சைதாப்பேட்டை பகுதியில் பெரும்பாலும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களே உள்ளனர். கொரோனாவுக்கு ஒருவர் பலியானதை தொடர்ந்தும், அப்பகுதியை சேர்ந்த வடமாநிலத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் ஊரடங்கை மதிக்காமலும், பயமில்லாமலும் தேவையில்லாமல் வெளியே நடமாடி வந்தனர். இது குறித்து மாவட்ட காவல்துறைக்கு புகார்கள் சென்றது.
இதையடுத்து சைதாப்பேட்டை காந்திரோட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பலர் தேவையில்லாமல் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டும், சுற்றித்திரிந்து கொண்டும் இருந்தனர்.
போலீசார் அவர்களிடம் விடுதிகளுக்குள் செல்லுமாறு அறிவுறுத்தினர். எனினும் அவர்கள் உள்ளே செல்லாமல் வெளியே நின்று கொண் டிருந்தனர். பலர் ரோட்டில் சுற்றிக்கொண்டு இருந்தனர். பலமுறை எச்சரித்தும் கேட்காததால் வேறுவழியின்றி போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டி அடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Rathiri Rounds Never Stop