புதுடெல்லி:
டெல்லியில் வன்முறை பரவிய சமயத்தில் மத்திய அரசு அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலிறுத்தி வருகிறது.
இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. டெல்லி வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். ஆனால், வன்முறை தொடர்பாக விவாதிக்க இப்போது நேரம் ஒதுக்க முடியாது என சபாநாயகர் ஓம் பிர்லா திட்டவட்டமாக கூறினார்.
இரு தரப்பினரும் ஒருவரையொருவர் நெட்டித் தள்ளினர். இதனால் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவை முதலில் 3 மணி வரையிலும், பின்னர் 4 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.
Rathiri Rounds Never Stop