Breaking News
Home / வட மாவட்டங்கள் / வேலூர் / வேலூரில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.க. பேரணி

வேலூரில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.க. பேரணி

வேலூர்:

வேலூரில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் இன்று பேரணி நடைபெற்றது. வேலூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை கண்டித்தும் பேரணி நடந்தது.

வேலூர் காகிதப்பட்டறை திரவுபதி அம்மன் கோவில் திடலில் இருந்து பேரணி தொடங்கியது. வேலூர் மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தாங்கினார்.

மாநில பொதுச்செயலாளர் பொன் பால கணபதி பேரணியை தொடங்கி வைத்தார். மாவட்ட துணை தலைவர் ஜெகன்நாதன், பாபு, பாஸ்கர், பொருளாளர் மனோகரன் மாவட்ட செயலாளர்கள் ஏழுமலை, சரவணகுமார், மண்டல தலைவர் ஜெகன்மோகன், சீனிவாசன், கமல விநாயகம், நந்தகுமார் உள்பட 500க்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

About Admin

Check Also

‘மெட்டி ஒலி’ சீரியல் நடிகை உமா மறைவு

சென்னை-‘மெட்டி ஒலி’ சீரியலில் நடித்த நடிகை உமா மகேஸ்வரி, 40, உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.மெட்டி ஒலி சின்னத்திரை தொடரில், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster