Breaking News
Home / ம மாவட்டங்கள் / திருச்சிராப்பள்ளி / மார்ச் 11–ந்தேி முதல் வங்கி ஊழியர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தம்

மார்ச் 11–ந்தேி முதல் வங்கி ஊழியர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தம்

திருச்சி, பிப். 28–

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

அகில இந்திய வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தமிழ்நாடு–புதுச் சேரி மாநில பொதுச் செயலாளர் ஜி.கிருபாகரன் தலைமையில் திருச்சியில் நேற்று காங்கிரஸ் எம்பி சு.திருநாவுக்கரசரைச் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் கிருபாகரன் கூறியதாவது:–

ஊதிய உயர்வு கேட்டு அகில இந்திய அளவில் பொதுத்துறை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் 10 லட்சம் பேர் கடந்த 3 மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு இந்திய வங்கிகள் சங்கமும், அகில இந்திய வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்ட மைப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வை நிர்ணயிக்க வேண்டும். இதன்படி, எங்களுக்கு 2017-ல் வழங்கியிருக்க வேண்டிய ஊதிய உயர்வை, கடந்த 26 மாதங்களாக, 40 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை இறுதி செய்யாமல் மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது.

பெருநிறுவனங்கள் பெற்ற கோடிக்கணக்கான ரூபாய் வாராக் கடன்களை தள்ளுபடி செய்து விட்டு, எங்களுக்கு ஊதிய உயர்வு தராததற்கு அதைக் காரணம் காட்டுவது சரியல்ல.

கடந்த மாதம் 2 நாட்கள் வேலை நிறுத்தம் செய்த நிலையில், மார்ச் 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். அதற்கும் இந்திய வங்கிகள் சங்கமும், மத்திய அரசும் செவி சாய்க்கவில்லை என்றால் ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தைத் தொடங்க உள்ளோம்” என்றார்.

About Admin

Check Also

நீட் தேர்வு கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது” : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி !

“நீட் தேர்வு கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது” : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ! நீட் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster