Breaking News
Home / வட மாவட்டங்கள் / விழுப்புரம் / 4 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

4 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

விழுப்புரம், பிப்.27-

கோலியனூர் தெற்கு ஒன்றிய அண்ணா தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் 4 ஆயிரம் பேருக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் தெற்கு ஒன்றிய அண்ணா தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் உள்ள சிறப்பு அம்சங்களை விளக்கி பொதுக்கூட்டம் சகாதேவன்பேட்டை திரவுபதியம்மன் கோவில் வீதியில் நடைபெற்றது.

விழாவிற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.ஜி.சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் மனோகரன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அழகேசன், பேரவை செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் குணா வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் செல்வி திருநாவுக்கரசு, கிளை செயலாளர்கள் குமார், லட்சுமணன், காந்திமதி ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.

விழாவில் மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்துகொண்டு, ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, வேட்டி சேலை, ஹாட்பாக்ஸ், தையல் எந்திரம், சலவைப்பெட்டி, மின்சார அடுப்பு, குக்கர், பாத்திரங்கள், தென்னங்கன்றுகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பென்சில், பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் என மொத்தம் 4 ஆயிரம் பேருக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகவேல், வளவனூர் நகர செயலாளர் சங்கரலிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் ராமதாஸ், மாணவர் அணி செயலாளர் சக்திவேல், தலைமை கழக பேச்சாளர் ராசகோபால், மாவட்ட பிரதிநிதி முனுசாமி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் ராஜாமணி, ஆனாங்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ரமேஷ், மேலவை பிரதிநிதிகள் லட்சுமணன், பூங்கொடி ஆறுமுகம், பேரவை செயலாளர் தயாளன், அவைத்தலைவர் விநாயகம், முன்னாள் மேலவை பிரதிநிதி குப்பன், இணை செயலாளர் சுதாசங்கர், துணை செயலாளர் ஏழுமலை, பாசறை செயலாளர் மணிவண்ணன், ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் விஜயா சுரேஷ்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கோலியனூர் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் விஜயாசுரேஷ்பாபு நன்றி கூறினார்.

About Admin

Check Also

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததே அதிமுகவின் தோல்விக்கு காரணம் – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்!

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததே அதிமுகவின் தோல்விக்கு காரணம் – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster