Breaking News
Home / ஆந்திரா / ‛‛பென்சிலை திருடிட்டான் சார்.. கேஸ் போடுங்க”; போலீசில் புகார் அளித்த 1ம் வகுப்பு மாணவன்

‛‛பென்சிலை திருடிட்டான் சார்.. கேஸ் போடுங்க”; போலீசில் புகார் அளித்த 1ம் வகுப்பு மாணவன்

கர்னூல்: ஆந்திராவில் 1ம் வகுப்பு மாணவன், சக மாணவன் பென்சிலை திருடிவிட்டதாக கூறி போலீசாரிடம் புகாரளித்து அவன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு முறையிட்ட நிகழ்வு வைரலாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பெத்தகடுவூரை சேர்ந்த சிறுவன் ஹனுமந்த். அதே ஊரில் உள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று (நவ.,25) அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சில மாணவர்களுடன் வந்த ஹனுமந்த், அதில் ஒரு மாணவன் மீது பென்சிலை திருடி விட்டான் என புகார் கூறினான். இதனை கேட்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த போலீசார், புகாரளித்த மாணவனை சமாதானம் செய்துவைத்து இருவரையும் கைகுலுக்க சொல்கிறார்.

latest tamil news

கைகுலுக்கியும் சமாதானம் ஆகாத ஹனுமந்த், ‘என்னுடைய பென்சிலை திருடியவன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ எனப் பிடிவாதமாக போலீசாரிடம் கூறினான். அதற்கு வழக்குப்பதிவு செய்தால் நீதிமன்றம், ஜாமின் என பென்சில் திருடிய மாணவனின் பெற்றோர் அலைய நேரிடும் எனப் போலீசார் கூறுகின்றனர். இதனையடுத்து, நான் அவனுடைய பெற்றோரிடம் இது பற்றி கூறுகிறேன் என ஹனுமந்த் தெரிவித்தான். சிரிப்பை அடக்க முடியாத போலீசார் இருவரையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 1ம் வகுப்பு மாணவனின் இந்த செயல் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

 

About Admin

Check Also

கடனை திருப்பி செலுத்தாததால் மதுவந்தி வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்

சென்னை: நிதி நிறுவனத்திடம் கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாததால் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளான மதுவந்தியின் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster