சென்னை : முல்லை பெரியாறு அணை தொடர்பாக தமிழக – கேரள முதல்வர்கள் பேச்சு நடத்தும் தேதி நவ.14ல் நடக்க உள்ள தென்மாநில முதல்வர் மாநாட்டின் போது முடிவு செய்யப்பட உள்ளது.
முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கான முயற்சியில் கேரள அரசு இறங்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழக – கேரள முதல்வர்கள் இடையே டிசம்பரில் சென்னையில் பேச்சு நடத்தப்படும் என கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின் சட்டசபையில் பேசி இருந்தார். இந்த பேச்சின் போது முல்லை பெரியாறு மட்டுமின்றி பல்வேறு நீராதார பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. ஆனால் பேச்சு நடக்கும் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இதுகுறித்து தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது ‘நவ. 14ம் தேதி திருப்பதியில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக அமித் ஷா பங்கேற்கிறார். ‘அப்போது கேரள – தமிழக முதல்வர்கள் நேரில் பேசி சென்னையில் இரு மாநில நீராதார பிரச்னைகள் தொடர்பான பேச்சு நடக்கும் தேதியை முடிவு செய்வர்’ என்றனர்.
Rathiri Rounds Never Stop