சென்னை: தமிழகத்தில் 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
latest tamil news
சமீபத்தில் மத்திய அரசு பணியிலிருந்து தமிழக அரசு பணியிடத்துக்கு மாறுதலாகி வந்து அமுதா ஐ.ஏ.எஸ்.,க்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
*ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ் நியமனம்
*தொழில்துறையின் முதன்மை செயலாளராக இருந்த முருகானந்தம் நிதித்துறை முதன்மை செயலாளராக நியமனம்.
*தொழில்துறையின் கூடுதல் முதன்மைசெயலாளராக கிருஷ்ணன் நியமனம்
*ஊரகவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் முதன்மை செயலாளராக இருந்த கோபால், போக்குவரத்துறை முதன்மை செயலாளராக நியமனம்.
*பொதுத்துறை கூடுதல் முதன்மை செயலாளராக இருந்த சந்தீப் சாக்ஷனோ, நீர்வளத்துறை கூடுதல் முதன்மை செயலாளராக நியமனம்.
*போக்குவரத்து துறை கூடுதல் முதன்மை செயலாளராக இருந்த தயானந்த் கட்டாரியா, பொதுத்துறை கூடுதல் முதன்மை செயலாளராக நியமனம்.
*விளையாட்டு மேம்பாடு முதன்மைசெயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா, எரிசக்தி துறை செயலாளராக நியமனம்
*எரிசக்தி துறை செயலாளராக இருந்த தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறிதுறை முதன்மை செயலாளராக நியமனம்.
*கைத்தறி துறை முதன்மை செயலாளராக இருந்த செல்வி அபூர்வா இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலாளராக நியமனம்.
*கைத்தறி துறை முதன்மை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ், நில சீர்திருத்த துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
latest tamil news
Rathiri Rounds Never Stop