புதுடில்லி: ‛‛சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வால், லட்சக்கணக்கான ஏழை மக்கள் மீண்டும் விறகு அடுப்புக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டுள்ளனர்,” என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: வளர்ச்சி என்ற வார்த்தையில் இருந்து மத்திய அரசு வெகுதொலைவு விலகிச் சென்றுவிட்டது. லட்சக்கணக்கான ஏழைக்குடும்பங்கள் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வால், விறகு அடுப்பிற்கு மீண்டும் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டுள்ளனர். மோடியின் வளர்ச்சி வாகனம் ரிவர்ஸ் கியரில் செல்கிறது. பிரேக் பிடிக்காமல் செயலிழந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
latest tamil news
Rathiri Rounds Never Stop