Breaking News
Home / கல்வி / 19 மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறப்பு; உற்சாக வரவேற்பு

19 மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறப்பு; உற்சாக வரவேற்பு

சென்னை; ஒன்று முதல் எட்டாம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ செல்வங்களுக்கு ஆசிரியர்கள், ஆசிரியைகள் மலர் , இனிப்பு வழங்கி வரவேற்றனர். மாணவ செல்வங்கள் உற்சாகமாக காணப்பட்டனர் .

latest tamil news

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், 2020 மார்ச் 10ல் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பிறகு, முதல் அலை முடிந்ததும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள்திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டன.

தொற்றின் இரண்டாம் அலை பரவலால், 2020- – 21ம் கல்வியாண்டில், அனைத்து பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, செப்., 1 முதல், ஒன்பது – பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கும், கல்லுாரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் துவங்கின.அதே நேரத்தில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 19 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை.

சேலம் கொண்டப்பநாய்க்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொம்மலாட்ட அத்துடன் இன்றைய முதல் நாள் வகுப்பு தொடங்கியது.

தனியார் பள்ளிகளில், ‘ஜூம் செயலி, கூகுள் மீட்’ வழியே, ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டன. அரசு பள்ளி மாணவர்களுக்கு சில இடங்களில்,’வாட்ஸ் ஆப்’பில் ஆசிரியர்கள் பாட குறிப்புகளை வழங்கினர். அரசின் கல்வி, ‘டிவி’யில் பாடங்களின் ‘வீடியோ’க்கள் ஒளிபரப்பாகின. இதனால், அரசு பள்ளி மாணவ – மாணவியருக்கு கற்பித்தல் இடைவெளி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது, நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன; 19 மாதங்களாக வீடுகளில் அடைந்து கிடந்து, கற்பித்தல் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட, ஏராளமான மாணவ – மாணவியர் இன்று பள்ளிகளுக்கு உற்சாகமாக வந்தனர்.

latest tamil news

இந்த மாணவர்கள் சுழற்சி முறையில், தினமும் பள்ளிக்கு வந்து செல்லும் வகையில் ஆர்வமூட்டி, மகிழ்ச்சியுடன் அவர்களை நடத்த, பல்வேறு முயற்சிகளை பள்ளிகள் மேற்கொண்டுள்ளன.அரசு தரப்பில், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்கள், பள்ளி வாசலில் நின்று, மாணவர்களை மனமகிழ்வுடன் வரவேற்கவும், முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

 

 

 

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster