Breaking News
Home / செய்திகள் / தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் (சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

latest tamil news

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும்.

இன்று (அக்.,30ம் தேதி): கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் (சிவப்பு எச்சரிக்கை) மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும்
தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலுார், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

latest tamil news

நாளை 31ம் தேதி: கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் (சிவப்பு எச்சரிக்கை) மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும்,
புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினர், கடலுார், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

latest tamil news

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைஅளவு:
ஸ்ரீவைகுண்டம் (துாத்துக்குடி) 18 செ.மீ.,
பரங்கிப்பேட்டை (கடலுார்) துாத்துக்குடி தலா 17 செ.மீ.,
ஒட்டப்பிடாரம் (துாத்துக்குடி), திண்டிவனம் (விழுப்புரம்) தலா 13 செ.மீ.,
காரைக்கால், செஞ்சி (விழுப்புரம்) எண்ணுார் (திருவள்ளூர்), தலா 10 செ.மீ.,
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), வானுார் (விழுப்புரம்), காயல்பட்டினம் (துாத்துக்குடி), வாலிநோக்கம் (ராமநாதபுரம்) தலா 9 செ.மீ.,
தாம்பரம் (செங்கல்பட்டு), அம்பத்துார் (திருவள்ளூர்), கடம்பூர் (துாத்துக்குடி), பாளையம்கோட்டை (திருநெல்வேலி), கயத்தாறு (துாத்துக்குடி), மரக்காணம் (விழுப்புரம்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), கடலுார் தலா7 செ.மீ.,

 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

 

latest tamil news

இன்று 30 ம்தேதி முதல் நவ., 1ம் தேதி வரை: மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இன்று 30ம் தேதி முதல் நவ.,3ம் தேதி வரை: தென்கிழக்கு அரபிக் கடலை ஒட்டிய தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

 

 

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster