புதுடில்லி : போர் விமானத்தில் இருந்து ஏவி, தரையில் உள்ள நீண்ட துார இலக்கை துல்லியமாக சென்று தாக்ககூடிய வெடிகுண்டுச் சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது.
தரையில் நீண்ட துாரம் உள்ள இலக்கை துல்லியமாக சென்று தாக்ககூடிய வெடிகுண்டை டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த வெடிகுண்டு, ஒடிசாவின் சண்டிபூரில் உள்ள ராணுவ சோதனை தளத்தில் இருந்து நேற்று பரிசோதிக்கப்பட்டது. இந்திய விமானப் படையின் போர் விமானத்தில் இருந்து போடப்பட்ட வெடிகுண்டு, தரையில் நீண்ட துார இலக்கை துல்லியமாக சென்று தாக்கியது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானத்தை செயல் இழக்க செய்யும் ‘அப்யாஸ்’ என்ற நவீன தொழில்நுட்பமும் ஒடிசா கடற்கரை பகுதியில் நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
Rathiri Rounds Never Stop