சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக தஞ்சை, திருவாரூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவக்கூடிய வளிமண்டல சுழற்சி மற்றும் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி போன்றவை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று (அக்.,28) இரவு முதல் மழை பெய்து வருவதால், சாலையில் தண்ணீர் தேங்கியது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருவதால் தஞ்சை, திருவாரூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
Rathiri Rounds Never Stop