Breaking News
Home / அரசியல் / ‘மேட் இன் இந்தியா’ பொருட்களை வாங்கும் நடைமுறை வேண்டும்: மோடி

‘மேட் இன் இந்தியா’ பொருட்களை வாங்கும் நடைமுறை வேண்டும்: மோடி

புதுடில்லி: ‛மேட் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் எளிய மனிதர்களின் தயாரிப்புகளை வாங்குவதிலும் ஆர்வத்தை வளர்த்துள்ளதாகவும், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை இந்திய மக்கள் வாங்க வேண்டும் என்ற நடைமுறையை கொண்டுவர வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று (அக்.,22) ஆற்றிய உரையின் போது பேசியதாவது: 100 கோடி தடுப்பூசி சாதனையை பேசும் இந்த தருணத்தில் பொருளாதார வளர்ச்சி பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளை சேர்ந்த வல்லுநர்களும் இந்திய பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள நிபுணர்கள், இந்திய பொருளாதாரம் குறித்து நேர்மறையான கருத்துகளை தெரிவிக்கின்றனர். இன்று, இந்தியாவிற்கு சாதனை படைக்கும் அளவுக்கு முதலீடு வருவதுடன், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது.

latest tamil news

முந்தைய காலங்களில் நமது நாட்டில் வெறும் கோஷம் மட்டுமே போடப்பட்டன. ஆனால், தற்போது அனைவரும் ‛மேட் இன் இந்தியா’ குறித்து பேசுகிறோம். ‛மேட் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் எளிய மனிதர்களின் தயாரிப்புகளை வாங்குவதிலும் ஆர்வத்தை வளர்த்துள்ளோம். இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை இந்திய மக்கள் வாங்க வேண்டும் என்ற நடைமுறையை கொண்டுவர வேண்டும்.

100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டதால் மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தால் துவண்டு விடாமல் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினோம். கொரோனா எனும் பெரும் துயரத்தை சந்தித்த நாம் எந்த துயரையும் சந்திக்கும் வலிமை பெற்றுள்ளோம்.

latest tamil news

 

விவசாயம், சுற்றுலா, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினோம். விவசாயிகளிடம் நேரடியாக விளைபொருள் பெறப்படுகிறது. வருங்காலங்களில் மிகவும் கவனமுடன் பண்டிகைகளை கொண்டாட வேண்டும். வீட்டில் இருந்து வெளியேறும்போது காலணி அணிவதுபோல், முகக்கவசம் அணிவதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

முதல் டோஸ் தடுப்பூசி போடாதவர்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தடுப்பூசி போட்டு கொண்டவர்கள், மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும். கோவிட்டை தடுப்பு நடவடிக்கைகளில், நமது முதல்கட்டமாக, அதில் மக்களை பங்கேற்க வைத்தோம். விளக்கு ஏற்றியும், கருவிகளை இசைத்தும் மக்கள் பங்கேற்றனர். இவை கோவிட்டை ஒழித்துவிடுமா என சிலர் கேள்வி எழுப்பினர். அந்த முயற்சிகள் எல்லாம் மருத்துவத்துறைக்கு உற்சாகத்தை அளித்தது. இவ்வாறு அவர் பேசினார்.

-source dinamalar

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster