Breaking News
Home / இந்தியா / பூட்டியே கிடக்கும் பூங்காக்கள் பல்லாவரம் மக்கள் கொதிப்பு

பூட்டியே கிடக்கும் பூங்காக்கள் பல்லாவரம் மக்கள் கொதிப்பு

குரோம்பேட்டை : பல்லாவரம் நகராட்சியில், நீண்ட நாட்களாக பூட்டிக் கிடக்கும் பூங்காக்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படாதது, பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பூங்காக்களை திறக்காதது ஏன் என, நலச்சங்க நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பல்லாவரம் நகராட்சியில், 47 பூங்காக்கள் உள்ளன. பல்வேறு வசதிகளுடன் சீரமைக்கப்பட்டு, சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வந்த இப்பூங்காக்களை, ஒரு வருடமாக, கண்டுக்கொள்ளவில்லை.பராமரிப்பு என்ற பெயரில், மாதந்தோறும், பல லட்சம் ரூபாய் வீணடிக்கப்படுவதாக எழுந்த. புகாரை அடுத்து, பராமரிப்பு பணியை மேற்கொண்டு வந்த நிறுவனத்திற்கு, ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்டது.

பராமரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.இதனால், அனைத்து பூங்காக்களையும் பூட்டி மூடிவிட்டனர். சில இடங்களில் மட்டும், அப்பகுதி மக்கள் பூங்காக்களை திறந்து பயன்படுத்திவிட்டு, மீண்டும் பூட்டி செல்கின்றனர். பல இடங்களில், பூட்டு போட்டு மூடிய நிலையிலேயே உள்ளது. குறிப்பாக, சுபம் நகரில் உள்ள மூன்று பூங்காக்களும், பல நாட்களாக பூட்டியே வைத்துள்ளனர்.இதன் காரணமாக, முதியோர் மற்றும் பெண்கள் நடைப்பயிற்சி செய்ய முடியாமலும், குழந்தைகள் விளையாட முடியாமலும் தவிக்கின்றனர்.

எனவே, நகராட்சி நிர்வாகம், பூங்காக்களை நேரடி கட்டுப்பாட்டில் பராமரித்து, தினமும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது புதிய ஒப்பந்ததாரரை நியமிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் அதிகம் கூடும் நகர்ப்புறங்களிலேயே, பூங்காக்கள் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், பல்லாவரத்தில் மட்டும் பூங்காக்கள் பூட்டியே கிடப்பது ஏன் என, நலச்சங்க நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

-source dinamalar

About Admin

Check Also

அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் : மோடி

புதுடில்லி:அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் என அரசியல் சாசன நாள் விழாவில் பிரதமர் மோடி கூறினார்.     …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster