புது டில்லி: மத்திய அமைச்சரவை இன்று (அக்., 21) பிரதமரின் கதி சக்தி எனும் ரூ.100 லட்சம் கோடி மதிப்பிலான தேசிய மாஸ்டர் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது.
![]()
|
உள்கட்டமைப்பு திட்டங்களை சரியான முறையில் திட்டமிடுவதற்கும் சுமூகமாக நிறைவேற்றுவதற்கும் 16 அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடையே தடையின்மை மற்றும் ஒருங்கிணைப்பை கொண்டுவருவதே கதி சக்தி திட்டத்தின் நோக்கம். அடுத்த 25 ஆண்டுகளுக்கான நாட்டின் செயல்திட்டமாக இது இருக்கும் என்கின்றனர். ரயில்வே, நெடுஞ்சாலைகள், பெட்ரோலியம் மற்றும் எரிவாயு, மின்சாரம், தொலைத்தொடர்பு போன்ற முக்கிய மத்திய அரசு அமைச்சகங்கள் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.
திட்டமிடலுக்கும் திட்டமிட்டதை களத்தில் செயல்படுத்தலுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைத்து, திட்டத்தை அதிக சக்தியுடனும், வேகத்துடனும் செயல்படுத்துவதே இதன் நோக்கம். அதற்காக அனைத்து துறைகளையும் டிஜிட்டல் முறையில் ஒரே குடையின் கீழ் இணைப்பர். இதன் மூலம் அமைச்சகங்களுக்கிடையேயான குழப்பங்களால் வேலைகள் தடைபடுவது குறையும். அதனால் நிதியிழப்பு தவிர்க்கபப்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
![]()
|
இந்நிலையில் கதி சக்தி தேசிய மாஸ்டர் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. அது தொடர்பாக அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்திட்டம் லாஜிஸ்டிக்ஸ் செலவைக் குறைக்க உதவும். விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார ஆதாயமாக மாறும்.” என குறிப்பிட்டுள்ளனர்.
Rathiri Rounds Never Stop

