மதுரை,-”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிக புறநோயாளிகள் பிரிவை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது,” என, மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

மதுரை அரசு மருத்துவமனையில் 400 கோடி ரூபாயில் நடக்கும் கட்டுமான பணிகளை நேற்று ஆய்வு செய்தார்.பின் அவர் கூறியதாவது: ஜிகா திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 25 ஆயிரம் சதுர அடி பரப்பிலான மருத்துவமனை கட்டுமானம் அடுத்தாண்டு அக்டோபரில் முடியும். தமிழகத்தில் 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகினர். 3,187 பேர் பாதிக்கப்பட்டதில், 351 பேர் சிகிச்சையில் உள்ளனர். டெங்கு தாக்கம் குறைவாகவே உள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தற்காலிகமாக வாடகை கட்டடத்தில் செயல்படுவதற்கான நிதியுதவியை மத்திய அரசு வழங்க உள்ளது.தற்காலிக புறநோயாளிகள் பிரிவை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. மதுரை அரசு மருத்துவ கல்லுாரி எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு 250 ‘சீட்’ கிடைத்தது பெருமையான விஷயம்.
அதற்கான வகுப்பறை, நர்ஸ், டாக்டர்கள் நியமனம் குறித்து ஆய்வு செய்துள்ளோம். கொரோனா இறப்பில் 34 பேருக்கு காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, விருதுநகரில் 380 கோடி ரூபாயில் கட்டப்படும் அரசு மருத்துவ கல்லுாரி கட்டட பணிகளை ஆய்வு செய்தார்.
Rathiri Rounds Never Stop