Breaking News
Home / செய்திகள் / பெண் அதிகாரிக்கு ‘டு பிங்கர்’ பரிசோதனை செய்யவில்லை: விமானப்படை தளபதி மறுப்பு

பெண் அதிகாரிக்கு ‘டு பிங்கர்’ பரிசோதனை செய்யவில்லை: விமானப்படை தளபதி மறுப்பு

புதுடில்லி: கோவையில் பாலியல் புகார் அளித்த பெண் அதிகாரிக்கு தடை செய்யப்பட்ட இரு விரல்கள் முறையில், ‘டு பிங்கர்’ பரிசோதனை செய்யப்படவில்லை என விமானப்படை தளபதி சவுத்ரி தெரிவித்து உள்ளார்.

கோவை, ரெட்பீல்ட்ஸில் உள்ள விமானப்படை கல்லுாரியில், விமான படை அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இதில், பங்கேற்ற, 28 வயது பெண் அதிகாரியிடம், சக அதிகாரியான அமித்தேஷ் ஹர்முக், 29, பாலியல் அத்துமீறல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசார், அமித்தேஷ் மீது, பாலியல் பலாத்கார சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி மணிக்கு விமானப்படை விசாரணை அதிகாரிகளிடம் அமித்தேஷ் ஒப்படைக்கப்பட்டார்.

latest tamil news

 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி போலீசில் அளித்த புகாரில், ‘விமானப்படை மருத்துவமனையில் எனக்கு இரண்டு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். இருவிரல்கள் முறையில் -டு பிங்கர் டெஸ்ட் பரிசோதனை செய்தனர். இந்த பரிசோதனை முறை, 2014ம் ஆண்டு முதலே தடை செய்யப்பட்டது என்ற தகவல் எனக்கு பின்னர் தான் தெரிந்தது. பாலியல் பலாத்கார புகாரை திரும்ப பெற வலியுறுத்தியதால், போலீசாரிடம் புகார் அளிக்கிறேன்’ என, குறிப்பிட்டிருந்தார். இந்த புகார்களை வைத்து, கோவை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதல் தகவல் அறிக்கையில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக விமானப்படை தளபதி சவுத்ரி கூறியதாவது: இது போன்ற சம்பவங்களுக்கு இந்திய விமானப்படை சட்டங்கள் கடுமையாக உள்ளது. பெண் அதிகாரிக்கு டு பிங்கர் பரிசோதனை செய்யப்பட்டதாக வெளியான அறிக்கை தவறு. அந்த பரிசோதனை செய்யப்படவில்லை. விதிமுறைகளை தெளிவாக அறிந்து வைத்துள்ளோம். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster