Breaking News
Home / வானிலை / தமிழகத்தில் பரவலாக நல்ல மழை

தமிழகத்தில் பரவலாக நல்ல மழை

சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது. ஈரோட்டில் பெய்த தொடர் மழையால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

 

latest tamil news

 

நேற்று இரவு முதல் திருவள்ளூர், காஞ்சி, மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்தது. திருச்சி,மணப்பாறை, திருவெறும்பூர், கரூர், குளித்தலை லாலாபேட்டை, மாயானூர், நாமக்கல் திருச்செங்கோட்டில் மழை பெய்தது. பள்ளிப்பாளையத்தில் பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பாதிப்பு ஏற்பட்டது.

latest tamil news

 

இது போல் புதுக்கோட்டை விராலிமலையில் 6 மணி நேரம் தொடர் மழை பெய்தது. இங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் சிரமப்பட்டனர். கோவை புறநகர், திருப்பூர் பெருமாநல்லூர், அவினாசி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.ஈரோட்டில் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் , தேனி, திருநெல்வேலி, தென்காசியில் பரவல் மழை பெய்தது. குற்றாலத்தில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் யாருக்கும் குளிக்க அனுமதி இல்லை . கரூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறையை கலெக்டர் அறிவித்துள்ளார்.

About Admin

Check Also

வந்துட்டேன்னு சொல்லு; திரும்ப வந்துட்டேன்னு சொல்லு; 8 மாவட்டங்களுக்கு மழை மிரட்டல்

சென்னை: ‛‛திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் இன்று (நவ.,17) இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster