வேதாரண்யம் அருகே தலித் மாணவரை காலில் விழ வைத்த சம்பவத்தின் எதிரொலி..!!

வேதாரண்யம் அருகே, அவதூறு பரப்பியதாக தலித் வகுப்பு மாணவரை காலில் விழ வைத்த சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வண்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் (17); தலித் வகுப்பைச் சேர்ந்தவர். 12ம் வகுப்பு படித்து வரும் இவர், முகநூலில் காடுவெட்டி குருவை தொடர்பு படுத்தி வந்த பதிவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தாராம்.
இது தொடர்பாக அந்தப் பகுதியைச் சேர்ந்த 30 பேர், மாணவர் ரஞ்சித்தை மிரட்டி காடுவெட்டி குருவின் படம் பதித்த பதாகைக்கு முன்பு காலில் விழ வைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வந்தது.
இதையடுத்து வண்டல் கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
Rathiri Rounds Never Stop