கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சேர்ப்பு

சென்னை :கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள அரசின் ஆலோசனை குழுவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இடம் பெற்றுள்ளார். எம்.எல்.ஏக்கள் ஆலோசனை குழுதமிழக அரசு கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு படியாக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி 13 கட்சிகளை கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. 13 பேர் கொண்ட ஆலோசனைக்குழுதிமுக. அதிமுக காங்., மதிமுக. விசிக பாமக பா.ஜ., உள்ளிட்ட 13 கட்சிகளின் சார்பில் தலா ஒரு எம்.எல்.ஏக்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக்குழு கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து அவ்வவப்போது கூடி ஆலோசனை வழங்கும் என கூறப்படுகிறது. இதன்படி,விஜயபாஸ்கர், அ.தி.மு.க., எழிலன் ,தி.மு.க., நயினார்நாகேந்திரன்,பா.ஜ., ஜி.கே மணி,பா.ம.க., முனிரத்தினம், காங்.,சதன் திருமலைகுமார், மதிமுக.,பாலாஜி, வி.சி.க.,நாகை மாலி, மா.கம்யூ.,ராமசந்திரன், இ.கம்.யூ.,ஜவாஹருல்லா, ம.ம.க.,ஈஸ்வரன், கொ.ம.தே.க.,வேல்முருகன் த.வா.க.,ஜெகன் மூர்த்த, புரட்சி பாரதம் உள்ளிட்ட 13 பேர் இடம் பெற்றுள்ளனர்.
Dailyhunt
Rathiri Rounds Never Stop