ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் … ஆலையை அரசே முழுமையாக கையகப்படுத்துக : திமுக கூட்டணி கட்சிகள்!!

இந்த நிலையில், ஆலோசனையின் போது, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கலாம் என திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன. ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டால் தென் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தான் தயாரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க அனைத்துக் கட்சி குழு அமைக்கலாம் என்றும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தவிர வேறு செயல்பாடுகளுக்கு மின்சாரம் தரக்கூடாது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மனிதாபிமான அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என்றும் மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட கூடாது என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் பாலகிருஷ்ணன் , ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே முழுமையாக கையகப்படுத்த வேண்டும் என்றும் கையகப்படுத்திய பிறகு ஆக்சிஜனை உற்பத்தி செய்ய தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கருத்துக்களை வைத்து இறுதி முடிவு எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது..
Rathiri Rounds Never Stop