Breaking News
Home / அரசியல் / 24 மணி நேரத்தில் 3,32,730 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு!

24 மணி நேரத்தில் 3,32,730 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு!

24 மணி நேரத்தில் 3,32,730 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,32,730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இதுவரையிலான பாதிப்பு 1,62,63,695 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 24 மணி நேரத்தில் மொத்தம் 2,263 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக 1,86,920 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 1,36,48,159 பேர் மீண்டுள்ளனர்.

இதனிடையே மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன. ஒரு சில இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை என்று சொல்லப்பட்டாலும் கூட விரைவில் தட்டுப்பாடு களையப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 13,54,78,420 போடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வரும் 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் சில மாநிலங்கள் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என தெரிவித்துள்ளன.

இதுவரை தமிழ்நாடு, கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தடுப்பூசி இலவசம் என கூறியுள்ளன.

About Admin

Check Also

அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் : மோடி

புதுடில்லி:அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் என அரசியல் சாசன நாள் விழாவில் பிரதமர் மோடி கூறினார்.     …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster