கல் குவாரி உரிமையாளரிடம் கைநீட்டிய இன்ஸ்பெக்டர் ‘சஸ்பெண்ட்’
பெரம்பலுார்: பெரம்பலுாரில், 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, பெரம்பலுார் டவுன் ஸ்டேசன் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து, திருச்சி மண்டல டி.ஐ.ஜி., ஆனிவிஜயா உத்தரவிட்டார். பெரம்பலுார் டவுன் ஸ்டேசன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் பால்ராஜ்,48, இவர், பெரம்பலுார் அருகே உள்ள கோனேரிபாளையம் பகுதியில் கல் குவாரி நடத்தி வரும், பெரம்பலுார் ராம்நகரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம், குவாரியிலிருந்து அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது வழக்கு பதியாமல் இருப்பதற்கு தனக்கு லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். இதையடுத்து, கல்குவாரி பணியாளர் ஜார்ஜ்பெர்ணாண்டஸ் என்பவர், கடந்த 20 தேதி காலை 10:45 மணியளவில், பெரம்பலுார் டவுன் ஸ்டேசனுக்கு வந்து இன்ஸ்பெக்டர் பால்ராஜிடம் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த பெரம்பலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., ஹேமசித்ரா தலைமையிலான போலீசார், ஸ்டேசனுக்குள் சென்று இன்ஸ்பெக்டரை பால்ராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து, லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர் பால்ராஜை சஸ்பெண்ட் செய்து, திருச்சி மண்டல டி.ஐ.ஜி., ஆனிவிஜயா நேற்று உத்தரவிட்டார்.
Dailyhunt
Rathiri Rounds Never Stop