பெரும்பாக்கம், ஏப்.22-சென்னை முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வருகின்றது அதன் காரணமாக சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்படி சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கபசுர குடிநீர் குடிக்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்.சுத்திகரிப்பான் திரவியத்தை வைத்து நன்றாக கைகளை கழுவ வேண்டும் ஆகியவற்றை காவல்துறையினர் சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் எடுத்துரைத்து வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக சென்னை புறநகர் பகுதியான சோழிங்கநல்லுர் தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம் தமிழ் நாடு குடிசை மாற்று வாரியம் 8 அடுக்கு குடியிருப்பு பகுதியில் S.16 காவல் நிலையம் ஆய்வாளர் சேட்டு உதவி ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, பிரபு மற்றும் காவலர்கள் ஆகியோர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக கவசம் அணியாத பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கொரோனாவின் ஆபத்துகளையும், அந்த தாக்கத்தால் ஏற்படும் விளைவுகளையும் முக கவசம் அணியாமல் சென்ற பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.
பெரியவர்கள் வெளியே வரவேண்டாம் என்றும் நாம் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே நம்மை சுற்றி இருப்பவர்களை நன்றாக கவனித்துக்கொள்ள முடியும் இது உயிர் பிரச்சனை அதனால் கவனமாக இருங்கள், விழிப்போடு இருங்கள், விழிப்புணர்வோடு இருங்கள் என்று பெரும்பாக்கம் போலிசார் கொரோனா பற்றிய விழிப்புணர்வை மேற்கொண்டனர்.

பெரும்பாக்கம். செய்தியாளர். A. அருண்
Rathiri Rounds Never Stop