Breaking News
Home / இந்தியா / இது கல்வித்துறையா? குழப்பத்துறையா?- 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான சிக்கல்கள்

இது கல்வித்துறையா? குழப்பத்துறையா?- 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான சிக்கல்கள்

இது கல்வித்துறையா? குழப்பத்துறையா?- 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான சிக்கல்கள்

கரோனா தற்போது வேலை வாய்ப்புகளைப் பறிக்கிறது என்பதை விட, கல்வி வாய்ப்புகளையும் பறிக்கிறது என்றுதான் கூற வேண்டும். 2020-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி முதல் தொடர்ந்து கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

லாக்டவுன் அறிவிக்கப்பட்டதுமே, பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படத் துவங்கிவிட்டதாகப் பலர் தரப்பிலிருந்தும் விவாதமாக்கப்பட்டது.

கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வந்த காலத்தில் தான் கரோனா தொற்று தமிழகத்தில் தலைகாட்டியது. எனினும் தேர்வுகள் தொடர்ந்து நடத்துப்பட்டு வந்தன. இறுதி தேர்வு நடந்து முடிந்ததும் கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக, லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.

ஆனால், 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி அடைந்துவிட்டதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த மாணவர்களுக்கு முந்தைய அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவு ஆகியவற்றைக் கொண்டு மதிப்பெண் போடப்பட்டது.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கமாக மே மாதத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். கரோனா பரவல் அந்நாட்களில் வேகமாக இருந்ததால், ஜுலை 16-ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.மாணவர்களின் ஆன்லைன் வகுப்பு

அதன்பின், பலமுறை மாற்றிவைக்கப்பட்ட நீட்தேர்வு செப்டம்பர் 13-ம் தேதி நடத்தப்பட்டது. இவ்வாறு, ஒவ்வொரு முறையும் மாணவர்கள் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிட்டது. அந்த ஆண்டில், மாணவர் சேர்க்கையில் தாமதம், தேர்வுகளில் தாமதம், தேர்வு முடிவுகளில் தாமதம் என்று பல காரணங்களால் கிராமப்புற மாணவர்கள் பலர் மேல் படிப்புகளில் சேரவேயில்லை.

இந்த ஆண்டி நடப்பது?

கடந்த பல மாதங்களாகக் கட்டுக்குள் இருந்த கரோனா தொற்று இந்த ஆண்டு, மார்ச் மாதம் முதல் ஏறுமுகத்தில் இருக்கிறது. தமிழகத்தில் நடந்த பொதுத் தேர்தல் பணிகள் காரணமாக கரோனா தொற்று அதிகரித்திருப்பதாகக் கூறப்பட்டாலும், பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டதும் முக்கிய காரணம் என்கிறார் பத்திரிகையாளர் பிரியன். அவரை வாக்கு எண்ணிக்கையின் சிக்கல்கள் மற்றும் கரோனா பரவல் குறித்துப் பேசத் தொடர்பு கொண்டபோது, “தேர்தல் நேரத்தில் கரோனா தொற்று பரவியதாக கூறிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அதற்கு முன் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தஞ்சையில் உள்ள மாணவர்களுக்கு கரோனா தொற்ற உறுதி செய்யப்பட்டதை நாம் பேசுவதேயில்லை” என்று தெரிவித்திருந்தார்.

எனவே மாணவர்களின் நேரடி வகுப்புகளும் கரோனா தொற்று பரவலை அதிகப்படுத்தியுள்ளது என்றே கூறவேண்டும்.

மாணவர்களுக்குத் தேர்வுகள் ரத்து செய்வதும், தேர்வைத் தள்ளி வைப்பது போன்றவை தற்போது பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, அடுத்தடுத்த கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களையும் பாதிக்குமோ என்ற அச்சம் பெற்றோர்கள் மத்தியில் இல்லாமல் இல்லை.

ஏனெனில் இந்த முறை தமிழகத்தில் 10 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஜே.இ.இ தேர்வு ஒத்திவைக்கப்பட்டது, முதுகலை மாணவர்களுக்கான நீட்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆகஸ்ட் 1-ம் தேதிதான் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவே மிகவும் தாமதம்தான். காரணம், மாணவர்கள் மே மாதத்தில் இந்த தேர்வுகளை எழுதியிருக்க வேண்டும்.

அதேபோல் வழக்கமாக இந்நேரத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைதாள்த் திருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வரும். ஆனால், இந்த ஆண்டு தேர்வுகள் மே மாதம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போது கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், தேர்வுகள் நடத்தப்படுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கல்வியாளர் முனைவர் முருகையன் பக்கிரிசாமி அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “தேர்வா? உயிரா? என்று பார்த்தால் உயிர் தான் முக்கியம். மாணவர்களுக்குத் தெளிவான முடிவைச் சொல்லாமல் குழப்புகின்றனர். இது தான் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.

சென்றவாரம் முழுவதும், தலைமைச் செயலாளர் கல்வித்துறை செயலாளருடன் ஆலோசிக்கிறார், கல்வித்துறை செயலாளர் பள்ளிக்கல்வித்துறையுடன் ஆலோசிக்கிறார் என்று ஒவ்வொரு நாளும் நாட்களை தட்டிக்களித்துக்கொண்டே இருந்தனர். ஆனால், திடீரென்று செய்முறை தேர்வு துவங்கப்பட்டது. இப்போது, அந்த மாணவர்கள் என்ன நினைப்பார்கள். தேர்வு நடக்குமா? இவர்கள் மாற்றுவார்களா? என்று நிச்சயமற்ற தன்மையை மாணவர்கள் மத்தியில் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றனகல்வியாளர் முனைவர் முருகையன் பக்கிரிசாமி

இது கல்வித்துறையா, குழப்பத்துறையா? என்ற நிலை உருவாகியுள்ளது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுகள் ரத்து மற்றும் எதன் அடிப்படையில் மதிப்பெண் போடப்படும் என்பதைப் பின்னர் முடிவு செய்யப்படும் என்று தமிழக அரசு முன்னர் அறிவித்திருந்தது. இன்று செய்தியில், அதிக மதிப்பெண் எடுக்க விரும்பும் 10 வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்று செய்தி வந்திருந்தது. இது உண்மையா என்று தெரியவில்லை. மாணவர்களுக்கு மீண்டும் குழப்பத்தைத் தான் ஏற்படுத்தும்.

முதலில் ஆன்லைன் வகுப்புகள் வேண்டாம் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்பின் தனியார் கல்வி நிறுவனங்கள், பணம் வசூலிப்பதால் அதற்கான ஆன்லைன் வகுப்புகள் துவங்கப்பட்டன. கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி எப்படிக் கிடைக்கும் என்று கேள்வி எழுப்பியதும், தொலைக்காட்சி வழியாகப் பாடம் நடத்தத் தமிழக அரசு ஏற்பாடு செய்தது. அதுவும், அனைத்து மாணவர்களுக்கும் சரியாகச் சென்றடைவில்லை. எனவே தான், கடந்த சட்டமன்ற தேர்தலில் விவாதத்திற்கும் உட்படுத்தாமல் தேர்வுகளை ரத்து செய்தார் முதலமைச்சர்.

இதுபோன்ற காலகட்டத்தில், கல்வி காலாண்டு ஜூன் மாதத்தில் துவங்க வேண்டும் என்று இல்லை. தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அதேபோல், தொடர்ந்து மருந்துகளைச் செலுத்தி கரோனா தொற்றைக் கட்டுப்படுத்திய பின், தேர்வுகளை நடத்தலாம்.

12-ம் வகுப்புத் தேர்வைத் திருவிழா மாதிரி நடத்த வேண்டியதில்லை. சிறிய அளவில் நடத்தி முடித்துவிடலாம். மாணவர்கள் நீண்ட தூரம் பயணத்தைத் தவிர்த்து அவர்கள் இருக்கும் பகுதியில் உள்ள பள்ளிகளில் சிறிய அளவில் தேர்வுகள் நடத்தி முடிக்கலாம். எடுத்தோம், கவுத்தோம் என்று முடிவுகள் எடுக்கக் கூடாது.

பாரத் பைபர் நெட் என்ற ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. இதைப் பற்றி யாராவது சிந்தித்தார்களா?. எதாவது கிராமத்தில் அது சென்றடைந்துள்ளதா? அது அறிவித்ததோடு நின்றுபோய்விட்டது. இந்த திட்டத்திற்கு ஒரு மாதம் முழு வீச்சாக வேலைகள் செய்தால் நடைமுறைப்படுத்த முடியும். அவ்வாறு செய்தால், மாணவர்களுக்கு ஆன்லைன் பாடம் நடத்துவது, தேர்வுகள் நடத்துவதைச் செய்யலாம்.

அனைத்தும் ஒரு தட்டு மக்களுக்குக் கிடைக்கிறது. ஒரு தட்டு மக்களுக்குக் கிடைக்காமல் போகிறது” என்றார்.

Dailyhunt

About Admin

Check Also

அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் : மோடி

புதுடில்லி:அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் என அரசியல் சாசன நாள் விழாவில் பிரதமர் மோடி கூறினார்.     …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster