மேட்டுப்பாளையம் பகுதியில் 32வது சாலை பாதுகாப்பு மாதம்-விழிப்புணர்வில் கலக்கிவரும் ஆர்.டி.ஓ கதிரவன், பிரேக் இன்ஸ்பெக்டர் மாலதி….!!
நீலகிரி மாவட்டம் , மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 32வது சாலை பாதுகாப்பு மாதம் நிறைவையொட்டிசிறப்பு விழிப்புணர்வு கூட்டம் 18.1.2021 முதல் 17.2.2021 வரை நடத்தப்பட்டது. இதில் மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் கதிரவன் , பிரேக் இன்ஸ்பெக்டர் மாலதி ஆகியோர் கலந்துகொண்டு போக்குவரத்து ஓட்டுநர்கள் எவ்வாறு பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் வாகனங்களை இயக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வை குறித்து நமது ராத்திரி ரவுண்ட்ஸ் இதழ் செய்தியாளர்களிடம் ஆர்.டி.ஓ கதிரவன் தெரிவிக்கையில் சாலை பாதுகாப்பு என்பது ஜனவரி மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது அல்ல, சாலையில் வாகனங்கள், வாகன ஓட்டிகள் உள்ளவரை பாதுகாப்பு தொடர வேண்டும் .
ஒவ்வொரு வாகன ஓட்டியும் வாகனத்தை இயக்க துவங்குவதற்கு முன்பு ஒரு நிமிடம் கண்களை மூடிப் பார்த்தால் முன்பாக தனது குடும்பமும் எதிரில் வரும் நண்பரின் குடும்பமும் நம் கண் முன்னால் வரவேண்டும்.
சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு எனவே சாலையில் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் தற்போது கொரோனா நோய் தொற்று வீரியம் குறைந்து காணப்பட்டாலும் ஆங்காங்கே கொரோனா நோய்தொற்று பரவிக் கொண்டு தான் உள்ளது.
எனவே தமிழக அரசு நமக்கு அறிவித்தபடி முக கவசம் அணிதல் சனிடைசர், போன்றவற்றை தொடர்ந்து நாம் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருத்தல் வேண்டும். சாலை விதிகளையும், பாதுகாப்பு விதிகளையும் சரியாக நாம் கடைப்பிடித்தால் நம்மை நாம் பாதுகாப்பதோடு நம் குடும்பமும், நம்மை நம்பி நமது வாகனத்தில் வரும் நூற்றுக்கணக்கான பயணிகளின் குடும்பமும், மகிழ்ச்சியாக வாழ முடியும் என புன்னகையுடன் தெரிவித்தார்.
மேலும் நமது ராத்திரி ரவுண்ட்ஸ் செய்தியாளர்கள் ஹரி பிரிய ரவி, சாமுவேல் ஆகியோரிடம் பிரேக் இன்ஸ்பெக்டர் மாலதி தெரிவிக்கையில்தற்போது பெண்கள் கால் பதிக்காத துறையே இல்லை. ஆண்களுக்கு நிகராக எல்லாத் துறைகளிலும் பெண்கள் வந்து விட்டனர்.
அதுபோலவே இருசக்கர வாகனங்கள், துவங்கி பல சக்கரங்கள் உள்ள வாகனங்களை இயக்குவதில் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். சாலைவிதிகளையும், சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளையும் நாம் முறையாக கடைப்பிடித்தால் பல விபத்துக்கள் தடுக்கப்படும் எனவே விழிப்புடன் இருப்போம் விபத்துக்களை தடுப்போம் என தெரிவித்தார்.
Source : Rathiri Rounds News
Rathiri Rounds Never Stop