Breaking News
Home / அரசியல் / சசிகலாவுக்கு கனிமொழி ஆதரவு… தேர்தல் நெருங்க நெருங்க சூடு பிடிக்கும் அரசியல் களம் !

சசிகலாவுக்கு கனிமொழி ஆதரவு… தேர்தல் நெருங்க நெருங்க சூடு பிடிக்கும் அரசியல் களம் !

சசிகலாவுக்கு கனிமொழி ஆதரவு… தேர்தல் நெருங்க நெருங்க சூடு பிடிக்கும் அரசியல் களம்..!!

சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் திமுக சார்பில் பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மகளிரணி செயலாளர் கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கனிமொழி தருமபுரியை அடுத்த பழைய தருமபுரியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், தமிழக அளவில் 85 சதவீதமாக உள்ள கல்வியறிவு, தருமபுரி மாவட்டத்தில் 67 சதவீதமாக உள்ளது. இதன் மூலம் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், தன் மாவட்டத்தில் எந்தளவுக்கு அக்கறை காட்டுகிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்றார்.

மேலும், மதுரைக்கு இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனை ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பினார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையுடன் பிற பகுதிகளில் தொடங்கிய எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஆனால் மதுரையில் இப்பணி இன்னும் தொடங்கப்படவில்லை.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்பது ஓபிஎஸ்ஸின் கனவாக உள்ளது. ஆனால், அவரது கட்சியில் உள்ள குழப்பங்களை சரி செய்தாலே ஓரளவுக்காவது வெற்றி பெறுவதை பற்றி சிந்திக்கலாம் என்றார்.

மேலும் சசிகலா தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், யார் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அக்கட்சியின் முடிவு. சசிகலா அரசியலுக்கு வரலாம், வேண்டாம் என நான் கூறவில்லை, கூறவும் முடியாது என்றார் கனிமொழி என தெரிவித்தார்.

ஏற்கனவே சசிகலா அரசியலுக்கு வரலாம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார். இதனால் அவரது அரசியல் வருகைக்கு எதிர்ப்பு இல்லை என கூறப்படுகிறது. அதேநேரத்தில் அவர் அமமுகவில் பயணிப்பாரா அல்லது அதிமுகவை மீட்பாரா என்ற கேள்வி மிகவும் சத்தமாக எழுந்துள்ளது.

Thanks to Dailyhunt

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster